தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்வி ; அழகு ; செழிப்பு ; நுகர்ச்சி ; துறக்கம் ; ஐசுவரியம் ; மகளிரின் கொஞ்சற்பேச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐசுவரியம். துகடீர் பெருஞ்செல்வம். (நாலடி, 2). 1. Wealth, riches;
  • . 7. See செல்லம், 3.
  • சுவர்க்கம். (அக. நி.) 5. Inddra's heaven;
  • நுகர்ச்சி. (தொல். பொ. 259, உரை.) 4. Enjoyment, pleasure, experience of happiness;
  • அழகு. தேவரிற் பெற்றநஞ் செல்வக்கடி. (திருக்கோ. 14). 3. [T. celuvamu, K. celvu.] Beauty;
  • செழிப்பு. சேனையின் செல்வ நோக்கி (திருவிளை. மெய்க்கா. 29). 2. Immensity, prosperity, flourishing state;
  • கல்வி. (அக. நி.) 6. Learning;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (செல்லம்), s. wealth, ஐசுவரியம்; 2. felicity, happiness, இன்பம்; 3. flourishing condition, prosperity, சீர்; 4. learning, கல்வி; 5. Swarga, the blissful paradise of Indra. செல்வச் செருக்கு, the pride of wealth. செல்வப் பூங்காவனம், (chr. us.), the garden of Eden, Paradise. செல்வம் பொழிய, to abound in wealth. செல்வன், (fem. செல்வி), a prosperous happy person, a son, 2. God, 3. a king. செல்வி, a wealthy lady; 2. Lakshmi; 3. the daughter; 4. a woman, matron, lady.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • cottu சொத்து wealth, riches; prosperity

வின்சுலோ
  • [celvm] ''s.'' Felicity, prosperity, a flourishing state, சீர். 2. Wealth. riches, affluence, opulence, ஐசுவரியம். 3. Luxury, சம்பிரமம். ''(c.)'' 4. Swerga, the blissful pa radise of Indra. சுவர்க்கம். 5. Learning, erudition, கல்வி. 6. ''(fig.)'' Enjoyment, plea sure, happiness, delight, bliss, whatever gives delight, இன்பம். செல்வத்திற்கழகுசெழுங்கிளை தாங்குதல். Pro viding for the wants of kindred and friends becomes a rich person. பிள்ளையில்லாதசெல்வஞ்செல்வமல்ல. Prosperity without children is no prosperity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செல்-. 1. Wealth,riches; ஐசுவரியம். துகடீர் பெருஞ்செல்வம் (நாலடி,2). 2. Immensity, prosperity, flourishing state;செழிப்பு. சேனையின் செல்வ நோக்கி (திருவிளை.மெய்க்கா. 29). 3. [T. celuvamu, K. celvu.]Beauty; அழகு. தேவரிற் பெற்றநஞ் செல்வக்கடி(திருக்கோ. 14). 4. Enjoyment, pleasure, experience of happiness; நுகர்ச்சி. (தொல். பொ.259, உரை.) 5. Indra's heaven; சுவர்க்கம். (அக.நி.) 6. Learning; கல்வி. (அக. நி.) 7. Seeசெல்லம், 3.