தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொழில் ; செயல் ; மன உடல் செய்கைகள் ; வேலைப்பாடு ; ஒழுக்கம் ; உடன்படிக்கை ; செயறகைப் பொருள் ; காண்க : செய்கைச்சூத்திரம் ; பில்லிசூனியம் ; வேளாண்மை ; அரசாங்க அனுமதிபெற்றுப் புதிதாகப் பண்படுத்திய நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசாங்கத்தாரது அனுமதியாற் பெற்றுப் புதிதாகப் பண்படுத்திப் பயிரிடப்பெற்ற காட்டுநிலம். (J.) 11. Forest land newly broken up, enclosed and cultivated, held by grant or permission from Government;
  • உடன்படிக்கை. ஆதிசைவ னாரூரன் செய்கை (பெரியபு. தடுத்தாட். 59). 6. Agreement, contract, as a solemn act;
  • ஒழுக்கம். பேரருளாளர் தத்தஞ் செய்கையிற் பிழைப்பதுண்டோ (கம்பரா. விபீடண. 128). 5. Conduct;
  • வேலைப்பாடு. செய்கையழிந்து சிதன்மண்டிற் றாயினும் (நாலடி, 147). 4. Workmanship, work;
  • கருமம். Colloq. 3. Karma;
  • மனோவாக்குக்காயங்களிலுண்டாகும் இருவகை வினைகளாகிய பாவனாஸ்கந்தம். நின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை நேர்நின்ற ஞானமென நிகழ்ந்த வைந்து மொன்றிய கந்தத்து (பெரியபு. திருஞான. 916). 2. (Buddh.) Actions, physical and mental;
  • செயல் மக்கள் மனம்வேறு செய்கையும் வேறு (நாலடி, 127). 1. Act, deed, action;
  • . 8. See செய்கைச்சூத்திரம். (நன். 20, உரை.)
  • பில்லிசூனியம். இந்த நோய் செய்கையாலானது. 9. Witchcraft, sorcery;
  • வேளாண்மை. (J.) 10. Cultivation of land, agricultural labour;
  • செயற்கைப்பொருள். இந்தச் சரக்கு செய்கை. 7. Artificial product, artifact; that which is manufactured;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. act, action, deed, performance, தொழில்; 2. artificial productions, செயற்கை, (opp. to விளைவு & இயல்பு; natural produce); 3. moral deeds, கிரியை; 4. a course of good conduct; 5. expedient, contrivance, means; 6. (prov.) forest land newly broken up and cultivated; held by grant or permission from government. அவரவர் செய்கையின்படி, according to one's deeds. செய்கைக்காணி, land held by a cultivator by a privilege from government. செய்கைத் தாழ்ச்சி, mismanagement, deficiency in labour. செய்கைப்பிழை, செய்கைத்தாழ்வு, neglect of one's proper calling, trespass in regard to health, diet, morals etc. செய்கையாட்சி, possession of land by privilege from government, with the title of a cultivator merely. செய்கையொப்பம், a written grant from govt. for cultivation.

வின்சுலோ
  • [ceykai] ''v. noun.'' Ant, action, deed, performance, achievement, operation, pro cess, தொழில். 2. ''[prov.]'' Cultivation of land, manuring, tillage, labor--commonly agricultural, வேளாண்மை. 3. Artificial pro ductions; those formed or modified by art, as drugs--opposed to விளைவு and இயல்பு, natural productions; constructed, pro duced, not natural, செயற்கை. 4. ''(c.)'' Moral deeds, good or evil doings, கிரியை. 5. A course of good conduct, நன்னடக்கை. 6. Witchcraft, sorcery, மாந்திரீகச்செய்கை. 7. Means, contrivance, art, expedient, re source, மனச்செய்கை. 8. ''[prov.]'' Forest land newly broken up, enclosed, culti vated, &c. held by grant, or permission, from government, செய்கைநிலம். அவரவர்செய்கையின்படி. According to one's deeds. செய்கைக்குத்தக்கபலன்காணும். The produce is according to the tillage; ''i. e.'' the reward will correspond with the (moral) actions.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Act, deed,action; செயல். மக்கள் மனம்வேறு செய்கையும்வேறு (நாலடி, 127). 2. (Buddh.) Actions, physical and mental; மனோவாக்குக்காயங்களிலுண்டாகும் இருவகை வினைகளாகிய பாவனாஸ்கந்தம். நின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை நேர்நின்ற ஞானமென நிகழ்ந்த வைந்து மொன்றிய கந்தத்து (பெரியபு.திருஞான. 916). 3. Karma; கருமம். Colloq. 4.Workmanship, work; வேலைப்பாடு. செய்கையழிந்து சிதன்மண்டிற் றாயினும் (நாலடி, 147). 5.Conduct; ஒழுக்கம். பேரருளாளர் தத்தஞ் செய்கையிற் பிழைப்பதுண்டோ (கம்பரா. விபீடண. 128). 6.Agreement, contract, as a solemn act; உடன்படிக்கை. ஆதிசைவ னாரூரன் செய்கை (பெரியபு.தடுத்தாட். 59). 7. Artificial product, artifact;that which is manufactured; செயற்கைப்பொருள்.இந்தச் சரக்கு செய்கை. 8. See செய்கைச்சூத்திரம்.(நன். 20, உரை.) 9. Witchcraft, sorcery; பில்லிசூனியம். இந்த நோய் செய்கையாலானது. 10.Cultivation of land, agricultural labour;வேளாண்மை. (J.) 11. Forest land newlybroken up, enclosed and cultivated, held bygrant or permission from Government; அரசாங்கத்தாரது அனுமதியாற் பெற்றுப் புதிதாகப் பண்படுத்திப் பயிரிடப்பெற்ற காட்டுநிலம். (J.)