தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசச் சின்னமாகிய நேர்கோல் ; நல்லரசாட்சி ; நெருப்புச் சலாகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழக்கக் காய்ந்த சலாகை. தீத்துறு செங்கோல் (மணி. 18, 2). 3. Red-hot rod;
  • அரசாட்சிச் சின்னமாகிய நேர்கோல். சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே (சிலப்.26, 139). 1. Sceptre, a symbol of sovereignty;
  • அறுவகை நாட்டமைதிகளில் ஒன்றாகிய நல்லரசாட்சி. செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த (மணி. 18, 82). 2. Kingly justice, impartial administration of justice, one of six nāṭṭamaiti, q.v., opp. to koṭuṅ-kōl;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pure gold (verbally red metal.) செங்கொல்லர், goldsmiths, see under கொல்.
  • s. a straight staff, sceptre; 2. just government; 3. a red-hot rod. செங்கோல் கோணாமல் இராச்சியபாரம் பண்ண, to reign with perfect justice. செங்கோலோச்ச, to rule justly, செங் கோல் செலுத்த. செங்கோற் கடவுள், Yamadharma, as the god dispensing impartial justice. செங்கோன்மை, righteous rule.

வின்சுலோ
  • [cengkōl] ''s.'' Sceptre, நீதிமுறை. 2. A right sceptre, kindly justice the right administration of justice--oppo. to கொடுங் கோல்; [''ex'' செம்மை, regular.] ''(c.)'' செங்கோல்கோணினாலெங்கும்கோணும், if jus tice is departed from, there will be trouble.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M.ceṅkōl.] 1. Sceptre, a symbol of sovereignty;அரசாட்சிச் சின்னமாகிய நேர்கோல். சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே (சிலப். 26, 139). 2.Kingly justice, impartial administration ofjustice, one of six nāṭṭamaiti, q.v., opp. to koṭu-ṅ-kōl; அறுவகை நாட்டமைதிகளில் ஒன்றாகிய நல்லரசாட்சி. செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த (மணி.18, 82). 3. Red-hot rod; பழுக்கக் காய்ந்த சலாகை.தீத்துறு செங்கோல் (மணி. 18, 2).