தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூடுகை ; இடம் ; ஏழனுருபு ; பக்கம் ; அணைக்கரை ; தாழ்வாரம் ; ஒரு மரம் ; அழகு ; ஒற்றன் ; வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலரணை. Nā. 2. Benami;
  • சுவர். தச்சனஞ்சிச் சாரகழ்கள்வனென்கின்ற தன்மையினாய் (நீலகேசி, 510). 1. Wall;
  • கூடுகை. (சூடா.) 1. Joining, uniting;
  • இடம். (பிங்.) 2. Place, situation;
  • இடப்பொருளுணர்த்தும் ஏழனுருபு. காட்டுச்சார்க் கொய்த சிறு முல்லை (கலித். 117,11). 3. A locative ending;
  • வகை. ஒரு சாராசிரியர். 7. Kind, class, species;
  • தாழ்வாரம் 6. Inner verandah under sloping root surrounding the inner courtyard of a house
  • . See சாரன்.சிறுவனுய்த்த சாரென நினைந்து (கந்தபு. அவைபுகு. 151).
  • ஒரு மரம். ஆரும் வெதிருஞ் சாரும் பீரும் (தொல். எழுத். 363). 9. A tree;
  • அழகு. (பிங்.) 8. Beauty, comeliness;
  • பக்கம். பழு புறத்தொருகார் (திருவிளை. ) 4. Side;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bank across a river with an opening for placing a fishing net, அணைக்கரை; 2. the inner verandah, திண்ணை; 3. kind, species, வகை; 4. side, party, பக்கம்; 5. portion, share, பாகம்; 6. beauty, அழகு. சார்போட, -குத்த, to put up a little bank for fishing. ஒருசார்விலங்கு, beasts of a certain class. ஒற்றைச்சார், a house without an open space in the centre. நாற்சாரும்வீடும், a square-built house with a verandah inside and an open court in the centre. சார்ச்சார், (adv.) everywhere.

வின்சுலோ
  • [cār] ''s.'' A bank across a river, or a channel with an opening for placing a fishing net, அணைக்கரை. ''(c.)'' 2. ''[prov.]'' The inner veranda of a house, திண்ணை. 3. Wings of a house protecting the win dows, தாழ்வாரம். 4. Kind, class, peculiar class or species, வகை. 5. Side, party, பக்கம். 6. Part, portion, share, பாகம். 7. Place, situation, இடம். (சது.) 8. Form of the seventh case, ஏழனுருபு. 9. Beauty, comeliness, அழகு. ''(p.)''
  • [cār ] --சாரு, கிறேன், ந்தேன், வேன், சார, ''v. n.'' To lean upon, to recline against, சாய. 2. To rest on or in, to repose on, to depend on, to adhere to, பற்றிக்கொள்ள. 3. To apply to, to resort to, to take shelter or refuge with, அடைய. 4. To approach, to approximate, to incline towards, அணுக. 5. To gain access to, to reach, to arrive at, கிட்ட. 6. To side with, to join a party ஓர்பாற்சார. 7. To be attached to, connected with, &c., அனுசாரமாக. 8. To be biassed or warped in judgment, to be partial to, நடுநிலைகோண. ''(c.)'' 9. To be adjacent, contig uous, to join, அடுக்க. 1. To come on- as events, disease, &c., சுகதுக்கங்கள்சார. 11. To tend or incline towards--as in color, smell, taste, temper, quality, &c., பொ ருந்த.--''Note.'' The verb sometimes con veys a transitive sense. அழகுசார்ந்தபூ. The beautiful flower. ''(p.)'' நான்போய்ச்சார்ந்தவிடம். The party with which I am connected by affinity or marriage. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சார்-. [M. cār.] 1. Joining,uniting; கூடுகை. (சூடா.). 2. Place, situation;இடம். (பிங்.). 3. A locative ending; இடப்பொருளுணர்த்தும் ஏழனுருபு. காட்டுச்சார்க் கொய்த சிறுமுல்லை (கலித். 117, 11). 4. Side; பக்கம். பழுமரத்தின் புறத்தொருசார் (திருவிளை. பழியஞ்சு. 12).5. Bund across a river or channel with anopening for placing a fishing net; அணைக்கரை.(W.) 6. Inner verandah under sloping roofsurrounding the inner courtyard of a house;தாழ்வாரம். 7. Kind, class, species; வகை. ஒருசாராசிரியர். 8. Beauty, comeliness; அழகு. (பிங்.)
    -- 1383 --
    9. A tree; ஒரு மரம். ஆரும் வெதிருஞ் சாரும் பீரும்(தொல். எழுத். 363).
  • n. < cāra. See சாரன், 1. சிறுவனுய்த்த சாரென நினைந்து (கந்தபு. அவைபுகு. 151).
  • n. < சார்-. 1. Wall; சுவர். தச்சனஞ்சிச் சாரகழ்கள்வனென்கின்ற தன்மையினாய்(நீலகேசி, 510). 2. Benami; மலரணை. Nāñ.