தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி ; அழகு ; நிறம் ; புகழ் ; தண்டாங்கோரைப்புல் ; செறும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிறம். சாயாற்கரியானை (திவ். இயற். பெரியதிருவந். 14). 3. Colour ;
  • அழகு. சங்கஞ் சரிந்தன சாயிழந்தேன் (திவ். திருவாய்.8,2,1). 2. Beauty ;
  • ஒளி. சாய்கொண்ட விம்மையும் (திவ். திருவாய்.3,9,9). 1. Brilliance, light ;
  • தண்டான்கோரை. சாய்க்கொழுதிப்பாவை. தந்தனைத்தற்கோ (கலித். 76,7). 1. Sedge ;
  • புகழ். இந்திரன் தன் சாயாப்பெருஞ்சாய் கெட (கம்பரா. நாகபா.21). 4. Fame, reputation ;
  • செறும்பு. இரும்பனை வெளிற்றின் புன்சாயன்ன (திருமுரு.312). 2. cf. சிராய். Splinter ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. brilliance, light ஒளி; 2. beauty, அழகு; 3. colour, நிறம்; 4. fame, புகழ். சாயினம், (சாய்+இனம்) a bevy of graceful ladies.
  • II. v. i. bend, lean, சரி; 2. lean upon, rest against, சாரு; 3. decline from a direct course, deviate, ஒதுங்கு; 4. crowd together, திரளு; 5. be defeated, இரி; 6. die, சா; 7. happen, succeed, நடந்தேறு; 8. be fatigued, troubled or afflicted; 9.become emaciated, மெலி. பொழுதுசாய வா, come in the afternoon. இதில் மேலே சாயாதே, don't lean upon this. தண்டு அப்படிச் சாய்ந்துபோயிற்று, the troops turned and marched that way. நான் செய்யும் காரியம் சாயுமா, will that which I am doing succeed? உன்னுடைய பிரயாணம் எப்போது சாயும், when will you go on your journey? சாயல், சாய்கை, சாய்தல், v. n. inclining. சாயுங்காலம், சாயங்காலம், the evening towards sun-set. சாய்கால், influence, செல்வாக்கு, சாய்காலம். சாய்ந்திருக்க, to be reclining or leaning sideward. சாய்மணை, a kind of pillow, திண்டு. சாய்மானம், leaning, inclination; 2. a back (of a chair, couch etc.) to lean against; 3. partiality. சாய்வு, v. n. slope, declivity, side of hill; 2. bias, prejudice; 3. sides, places round about; 4. straitened circumstances; 5. death. சாய்வு சரிவு, kindness, leniency; 2. bias.
  • VI. v. t. incline, bend a thing, cause to incline, சாயச்செய்; 2. drive a herd or a beast, ஓட்டு; 3. defeat, kill, தோற்கப்பண்ணு; 4. prejudice; 5. prove, மெய்ப்பி; 6. give plentifully, ஏராளமாய்க்கொடு. சாய்த்துக்கொள்ள, to bend oneself (reflexive sense). சாய்த்துக்கொண்டு நடக்க, to go or walk in a leaning posture. சாய்ப்பு, v. n. slope, declivity; 2. eaves, sloping roof; 3. a verandah. சாய்ப்பாய், adv. slopingly, leaning downwards. சாய்ப் பிறக்க, to make a shed or sloping roof, to put up a verandah. கண் சாய்ப்பு, connivance. செவியைச் சாய்க்க, to incline the ear, to listen. தலைசாய்க்க, to lay the head on, to bow the head, to hang the head. மாடு சாய்க்க, to drive cattle for grazing. முகச்சாய்ப்பு, aversion. வெட்டிச் சாய்க்க, to cut down tree, to lay low, to kill.
  • VI. v. t. incline, bend a thing, cause to incline, சாயச்செய்; 2. drive a herd or a beast, ஓட்டு; 3. defeat, kill, தோற்கப்பண்ணு; 4. prejudice; 5. prove, மெய்ப்பி; 6. give plentifully, ஏராளமாய்க்கொடு. சாய்த்துக்கொள்ள, to bend oneself (reflexive sense). சாய்த்துக்கொண்டு நடக்க, to go or walk in a leaning posture. சாய்ப்பு, v. n. slope, declivity; 2. eaves, sloping roof; 3. a verandah. சாய்ப்பாய், adv. slopingly, leaning downwards. சாய்ப் பிறக்க, to make a shed or sloping roof, to put up a verandah. கண் சாய்ப்பு, connivance. செவியைச் சாய்க்க, to incline the ear, to listen. தலைசாய்க்க, to lay the head on, to bow the head, to hang the head. மாடு சாய்க்க, to drive cattle for grazing. முகச்சாய்ப்பு, aversion. வெட்டிச் சாய்க்க, to cut down tree, to lay low, to kill.

வின்சுலோ
  • [cāy ] --சாய்க்கோரை, ''s.'' [''com.'' சாயக் கோரை.] A kind of sedge or Cyperus grass, ஓர்வகைக்கோரை. (சது.)
  • [cāy] கிறேன், ந்தேன், வேன், சாய, ''v. n.'' To incline or fall towards one side; to lean, to recline, lie down, சரிய. 2. To de cline--as a heavenly body from the meri dian, or toward the horizon, கிரகஞ்சாய. 3. To repair to, tend toward; crowd together --as a company of men or beasts, to re tire, change the course, திரளாகச்செல்ல. 4. To be routed, to retreat, to flee as a dis comfited army, இரிய. 5. To incline to wards--as the mind, disposition, &c., to be like in quality, color, shape, &c., மனஞ்சாய. 6. To be biased or prejudiced, to be par tial, to be warped in judgment, நடுநிலைசாய. 7. To die, perish, சாவ. 8. To incline--as the beam of a balance by a preponderating weight, நிறைதாழ. 9. To decline from a di rect course, to diverge, to become oblique, to turn aside, to deviate, ஒதுங்க. 1. To run ashore--as a vessel, கப்பல்கரைசாய. 11. To lean upon, rest against, சார. 12. To fail or come short in a comparison, தளர. 13. To happen, succeed, நடந்தேற. ''(c.)'' பொழுதுசாயவா. Come in the afternoon. இது மேற்கே சாய்கிறது. This inclines west ward. சாய்ந்துகிட. Lie down. ''(in contempt.)'' இதின்மேலேசாயாதே. Don't lean upon it. உன்பிரயாணம்எப்பொழுதுசாயும். When will you set out on your journey? என்காரியஞ்சாயுமா. Shall I succeed in my undertaking? தண்டுஅப்படிச்சாய்ந்துபோயிற்று. The army marched that way. பழத்துக்குச்சாய்ந்துவிட்டது. The fruit has begun to ripen. ''[prov.]''
  • [cāy] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To cause to incline, lean, slope, &c., to tilt up, or raise on one side, சாயச்செய்ய. 2. To turn or give a new direction to a body of men; to drive, take away a herd or a single beast, ஓட்டிக்கொண்டுபோக. 3. To cause to recline, or lie down, உடலைச்சாய்க்க. 4. To cast, to run metals in bars, in the rough, &c., to be wrought afterward, உருக் கிச்சாய்க்க.--''Note.'' The addition of கொள்ள gives a reflective sense to the verb in this, and similar cases. ''(c.)'' 5. ''[loc.]'' To steer a vessel toward the shore, கரையடுத்தோட்ட. 6. To bias or prejudice one, to excite or induce partiality, to warp, to turn, மனஞ் சாயப்பண்ண. 7. ''(p.)'' To rout, discomfit, defeat, to kill in battle, தோற்கப்பண்ண.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < chāyā. 1. Brilliance, light;ஒளி. சாய்கொண்ட விம்மையும் (திவ். திருவாய். 3, 9,9). 2. Beauty; அழகு. சங்கஞ் சரிந்தன சாயிழந்தேன் (திவ். திருவாய். 8, 2, 1). 3. Colour; �����சாயாற்கரியானை (திவ். இயற். பெரியதிருவந். 14).4. Fame, reputation; புகழ். இந்திரன் தன் சாயாப்பெருஞ்சாய் கெட (கம்பரா. நாகபா. 21).
  • n. perh. šara. 1. Sedge; தண்டான்கோரை. சாய்க்கொழுதிப்பாவை தந்தனைத்தற்கோ (கலித். 76, 7). 2. cf. சிராய். Splinter;செறும்பு. இரும்பனை வெளிற்றின் புன்சாயன்ன(திருமுரு. 312).