தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொச்சகக்கலிப்பா ; ஆடையுள் ஒரு வழிக் கொய்தடக்கிக் கட்டுவது ; அம்போதரங்க உறுப்புகளுள் ஒன்று ; இழிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்போதரங்கவுறுப்புக்களுள் ஒன்று . (தொல். பொ. 464.) 3. One of the elements of ampōtaraṅkam;
  • பரிபாடலுறுப்புக்களுள் ஒன்று. (தொல். பொ. 433.) 4. One of the elements of paripāṭal;
  • ஆடையுள் ஒருவழிக் கொய்தடுக்கிக் கட்டுவது. (தொல். பொ. 433, உரை.) 2. Ornamental pleating of a cloth when worn;
  • . 1. See கொச்சகக்கலிப்பா. (காரிகை, செய்.12.)
  • . See கொச்சை, 1 சிறப்பில்லாததனை ஒருசாரார் கொச்சை யென்றும் கொச்சகமென்றும் வழங்குவர் (யாப். வி. 79).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a species of கலிப்பா verse.

வின்சுலோ
  • [kocckm ] --கொச்சகக்கலிப்பா, ''s. [in pros.]'' A species of the கலிப்பா verse, embracing the following six varieties; viz.: 1. தரவு கொச்சக்கலிப்பா. 2. தரவிணைக் கொச்சகக் கலிப்பா. 3. சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா. 4. பஃ றாழிசைக் கொச்சகக்கலிப்பா. 5. மயங்கிசைக் கொச் சகக் கலிப்பா. 6. ஒருபோகு கொச்சகக் கலிப்பா. See காரிகை by அமுதசாகரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கொய்சகம். 1.See கொச்சகக்கலிப்பா. (காரிகை, செய். 12.) 2.Ornamental pleating of a cloth when worn;ஆடையுள் ஒருவழிக் கொய்தடுக்கிக் கட்டுவது. (தொல்.பொ. 433, உரை.) 3. One of the elementsof ampōtaraṅkam; அம்போதரங்கவுறுப்புக்களுள்ஒன்று. (தொல். பொ. 464.) 4. One of the elements of paripāṭal; பரிபாடலுறுப்புக்களுள் ஒன்று.(தொல். பொ. 433.)
  • n. < கொச்சை. Seeகொச்சை, 1. சிறப்பில்லாதவனை ஒருசாரார் கொச்சையென்றும் கொச்சகமென்றும் வழங்குவர் (யாப். வி. 79).