தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருதலைக் காமம் ; ஐந்து விருத்தச் செய்யுளால் ஒருதலைக் காமத்தைப்பற்றிக் கூறும் நூல்வகை ; ஏழிசையில் மூன்றாவதாகிய காந்தார சுரம் ; மருட்பா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருதலைக் காமம். கைக்கிளை முதலாப் பெருந்திணையிறுவாய் (தொ. பொ. 1). 1. (Akap.) Unreciprocated sexual love, as one-sided;
  • ஐந்து விருத்தச் செய்யுளில் ஒருதலிக்காமத்தைப் பற்றிக்கூறும் பிரபந்தம். (இலக். வி. 827.) 2. Poem in five viruttam verses treating of unreciprocated love;
  • ஏழிசையுள் மூன்றாவதாகிய காந்தாரசுரம். (திவா.) 3. The third note of the gamut, one of seven icai, q.v.;
  • மருட்பா. கைக்கிளை பரிபாட் டங்கதச் செய்யுளோடு (தொல். பொ. 430). 4. A kind of verse. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sexual love not reciprocated, ஒருதலைக்காமம்; 2. poem on love; 3. the palatal sound in music; 4. one of the strings of the lute, யாழின் நரம்பு.

வின்சுலோ
  • [kaikkiḷai] ''s. [in love poetry.]'' Sexual love before it is reciprocated. (See திணை.) 2. A poem, expressing voluptuous desires by either sex, ஓர்பிரபந்தம். (See பிரபந்தம்.) 3. One of the seven sounds in music--the palatal. அண்ணத்தாற்பிறக்குமொலி. 4. One of the strings of the lute corresponding to the same tone, யாழினோர்நரம்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. (Akap.)Unreciprocated sexual love, as one-sided;ஒருதலைக் காமம். கைக்கிளை முதலாப் பெருந்திணையிறுவாய் (தொல். பொ. 1). 2. Poem in five viruttamverses treating of unreciprocated love; ஐந்துவிருத்தச் செய்யுளில் ஒருதலைக்காமத்தைப் பற்றிக்கூறும்பிரபந்தம். (இலக். வி. 827.) 3. The third noteof the gamut, one of seven icai, q.v.; ஏழிசையுள்மூன்றாவதாகிய காந்தாரசுரம். (திவா.). 4. A kind ofverse. See மருட்பா. கைக்கிளை பரிபாட் டங்கதச்செய்யுளோடு (தொல். பொ. 430).