- ஆறுதலடைதல். இப்போதுதான் என்மனம் குளிர்தது. 6. To be consoled, comforted; to be satisfied;
- குளிர்ச்சியுறுதல். சிங்கி குளிர்ந்துங் கொலும் (நீதிநெறி. 59). 2. To becool, refreshing;
- வசூரிமுதலியவற்றால் மரித்தல். குழந்தை அம்மைவார்த்துக் குளிர்ந்து போயிற்று. 7. To die, as of an epidemic like small-pox;
- கண்முதலிய பொறிகளுக்கு இனியதாதல். என்புறக் குளிரு நெந்சுருகும் (கம்பரா. விபீடண. 21). 4. To be pleasant to the sense of touch, sight or hearing;
- உடம்பு சில்லிடுதல். 3, To get numbed, as in death;
- தங்குதல். குளிரு மரப்பலகை. (சீவக. 1782). To seat, rest;
- கருணையால் முகங்கனிதல். 5. To be benignant, as the countenance;
- பனிக்காற்று உறைத்தல். குளிர்வாடை. 1. To feel cold, chilly, as breeze;
|