தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வையின்மை ; ஒளியின்மை ; ஆடை முதலியவற்றின் முருட்டுப்பக்கம் ; மூடன் ; காதின் வெளிப்புறத்திலுள்ள செவிள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குருட்டுப்பாவலி.
  • மூடன். (W.) 4. Blind ignorant fellow used in contempt;
  • ஆடை முதலியவறின் குட்டுப்பக்கம். (W.) 3. The wrong side of a cloth; unfinished, unpolished, undressed side of a thing;
  • ஒளியின்மை. (W.) 2. Dimness in gems; opacity;
  • பார்வையின்மை. கூனுங் குருடும் (தமிழநா. 58). 1. Blindness, absence of vision;
  • காதின் வெளிப்புறத்துள்ள செவிள். 1. Tragus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. blindness, கண் தெரியாமை; 2 dimness, opacity, காந்தியில்லாமை, 3. what is unpolished, rough, விளக்க மற்றது. குருடன், (fem. குருடி, neut. குருடு) a blind person. குருட்டடி, a blind hit. குருட்டாட்டமாய்ப் பேச, to speak foolishly. குருட்டீ, a gad-fly. குருட்டுக்கண், a blind eye. குருட்டுக்கல், a dim gem. குருட்டுத்தனம், குருட்டாட்டம், blindness. குருட்டுநியாயம், erroneous reasoning, perverted judgment. குருட்டுப்பக்கம், the wrong side. குருட்டுப்பத்தி, superstition, blind faith. குருட்டு வைத்தியன், an ignorant physician. பிறவிக் குருடன், one born blind.
  • s. tragus, காதின் வெளிப்புறத் துள்ள செவிள். குருட்டுப்பாவலி, an ear ornament worn in the tragus.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அதரிசனம்.

வின்சுலோ
  • [kuruṭu] ''s.'' Blindness, பார்வையில்லா மை. 2. Dimness (in gems); opacity, ob scurity, காந்தியில்லாமை. 3. The worst side of a thing, cloth, &c., the unpolished, un dressed, unfinished side, குருட்டுப்பக்கம். 4. A blind or ignorant fellow (in contempt), புத்தியீனன். குருட்டுநாட்டுக்கொள்ளி. A fire-brand in a country of blind people; i. e. a light among the illiterate. குருட்டுப்பூனைவிட்டத்திற்பாய்ந்தாற்போல. As a blind cat attempted to jump at the beam. குருட்டுமாட்டைத்தெய்வங்காக்கிறது--மேய்க்கிறது. The deity tends the blind cow. கோல்எடுத்தபிள்ளைகுருட்டுப்பிள்ளை. That child playing with the sticks is a blind child; i. e. is likely to hurt itself.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. guḍḍi, K. M. Tu.kuruḍi.] 1. Blindness, absence of vision;பார்வையின்மை. கூனுங் குருடும் (தமிழ்நா. 58). 2.Dimness in gems; opacity; ஒளியின்மை. (W.)3. The wrong side of a cloth; unfinished,unpolished, undressed side of a thing; ஆடைமுதலியவற்றின் குருட்டுப்பக்கம். (W.) 4. Blind ignorant fellow, used in contempt; மூடன். (W.)
  • n. 1. Tragus; காதின்வெளிப்புறத்துள்ள செவிள். 2. See குருட்டுப்பாவலி.