தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிடக்கை: நோயில் விழுகை ; இருப்பிடம் ; வேத பாடசாலை ; வேதமோதுங்குழாம் ; ஆயுதம் பயிலிடம் ; ஆட்டுக்கிடை ; உட்கிடை ; ஐயம் ; உவமை ; நெட்டி ; சடைமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிடக்கை. கிடைகொள் குசைப்புற் பள்ளியுள் (சேதுபு. துத்தம. 18). 1. [M. kitappu.] Lying down;
  • நெட்டி கிழியினுங் கிடையினுந் தொழில்பல பெருக்கி (சிலப். 5, 33). 2. Pith;
  • சடை மரம். (பிங்.) 1. Sola pith. See
  • உவமை. கீதங் கிடையிலாள் பாட (சீவக. 731). 10. Comparison, likeness, equality;
  • சந்தேகம். பெருமை கிடையறக் கிளக்க லுற்றனனால் (வாயுசங். இருடிகள்பிர. 4). 9. Doubt;
  • உட்கிடை. அறநூற் கிடைநோக்கி (சேதுபு. வேதாள. 10). 8. Subject matter, contents;
  • ஆட்டுக்கிடை. 7. cf. gaddarikā. Flock of sheep, sheepfold;
  • ஆயுதம் பயிலிடம். இளங்கிடை காப்பரொடு (பெருங். உஞ்சைக். 37, 11). 6. School where fencing is taught;
  • நோயில்விழுகை. Colloq. 2. Falling ill;
  • வேதமோதும் பாடசாலை. மறையறா கிடையெங்கும் (திருவிளை. வாதவூ. 3). 4. School for reciting Vēdas;
  • வேதமோதுங் குழாம். ஓது கிடையினுடன்போவார் (பெரியபு. சண்டே. 17). 5. Band of disciples reciting a Vēda;
  • இருப்பிடம். மறையவர் கிடைக டோறும் (குற்றா. தல. திருமால். 55). 3. cf. ghara. Abode;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. & s. the state of lying down, reclining posture, கிடக்கை; 2. state, condition, நிலைமை; 3. bed, couch, கட்டில்; 4. pen, fold, stall, rest, any place where beasts or birds lie as in ஆட்டுக்கிடை, sheepfold; 5. comparison; 6. the pith of cork tree, நெட்டி, கிடந்த கிடை, lying as before. கிடந்த கிடையை மறந்துவிட்டான், he has forgotten his former state. கட்டில் கிடையாய்க் கிடக்க, படுகிடை யாய்க் கிடக்க, to be quite bedridden. ஒரு கிடையாய், lying on one side. நான் மூன்றுமாதங் கிடைவிடவில்லை, I have not left my bed for these three months. கிடைகூட்ட, -மறிக்க, -வைக்க, to pen up cattle for manure. கிடைச்சரக்கு, old stock of goods. கிடைநாய், a shepherd's dog. கிடைபாய், bed-mat. கிடைப்பாடு, v. n. lingering on a bed of sickness. கிடைமாடு, cattle in a pen.
  • v. n. & s. see under கிட.
  • VI. v. i. be had, be obtained, be formed; 2. come into one's possession; 3. join, come together, இயை II v. t. approach, encounter, meet, oppose. அடை (with dative see phrase). எனக்கு இனாம் கிடைத்தது, I got a present.

வின்சுலோ
  • ''v. noun.'' Lying, lying prostrate, a reclining posture, கிடக்கை. 2. ''s.'' State, condition--commonly not desirable, நிலை மை. 3. A fold, a pen, a stall, a nest, a lair, any place where beasts or birds lie, --as ஆட்டுக்கிடை, a sheep-fold, மாட்டுக் கிடை, a cow-stall, &c.
  • [kiṭai] ''s.'' Comparison, simile, உவமா னம். 2. A school for reading the Vedas, வேதம்பயிலிடம். 3. A porous shrub, கிடைச்சி, Aeschynomene, ''L/'' A kind of cork-tree used for making artificial flowers, toys, &c. A plug of it is worn in the perfora tion of the ear, to enlarge and fit it for jewels, சடை. See under கிட.
  • [kiṭai] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To be obtained, to come to one, to be rea lized, found; to come into one's possession, to turn to account, அடைய. With the agent in the dative, and the object in the nomi native--as எனக்கொருபுஸ்்தகங்கிடைத்தது; ''lit.'' a book has come to me; i.e. I have obtained a book. 2. To encounter, to be confronted with--as warriors; to oppose, எதிர்க்க. In the first sense, the verb is commonly used in the neuter gender. எனக்குப்பாக்கியங்கிடைத்தது. I have become rich or happy. I have had prosperity. வழுக்கிவிழுகையில் ஊன்றுகோல்போல் நீ கிடைத் தாயே. You have offered yourself to me as a prop--as a walking-stick to one who slips and is ready to fall.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கிட-. 1. [M. kitappu.]Lying down; கிடக்கை. கிடைகொள் குசைப்புற்பள்ளியுள் (சேதுபு. துத்தம. 18). 2. Falling ill;நோயில்விழுகை. Colloq. 3. cf. ghara. Abode;இருப்பிடம். மறையவர் கிடைக டோறும் (குற்றா. தல.திருமால். 55). 4. School for reciting Vēdas;வேதமோதும் பாடசாலை. மறையறா கிடையெங்கும்(திருவிளை. வாதவூ. 3). 5. Band of disciples reciting a Vēda; வேதமோதுங் குழாம். ஓது கிடையினுடன்போவார் (பெரியபு. சண்டே. 17). 6. Schoolwhere fencing is taught; ஆயுதம் பயிலிடம். இளங்கிடை காப்பரொடு (பெருங். உஞ்சைக். 37, 11). 7. cf.gaḍḍarikā. Flock of sheep, sheepfold; ஆட்டுக்கிடை. 8. Subject-matter, contents; உட்கிடை.அறநூற் கிடைநோக்கி (சேதுபு. வேதாள. 10). 9.Doubt; சந்தேகம். பெருமை கிடையறக் கிளக்க லுற்றனனால் (வாயுசங். இருடிகள்பிர. 4). 10. Comparison, likeness, equality; உவமை. கீதங் கிடையிலாள்பாட (சீவக. 731).
  • n. 1. Sola pith. See சடைமரம். (பிங்.) 2. Pith; நெட்டி. கிழியினுங் கிடையினுந் தொழில்பல பெருக்கி (சிலப். 5, 33).