- யானையைச் செலுத்தும் பரிக்கோல். காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல் (கலித். 2, 26). 7. Elephant goad;
- கழி. (சிறுபாண். 133, உரை.) 11. Rafter;
- ஒளி. (திவா.) 1. Brightness, lustre;
- இரத்தினம். பருக்காழுஞ் செம்பொன்னும் (பு. வெ. 9, 14). 2. Gem;
- முத்து. பரூஉக்காழாரம் (சிலப். 4, 41.) 3. Pearl,
- பளிங்கு. (பிங்.) 4. Crystal;
- மணிவடம். முப்பத்திருகாழ் (சிலப். 6, 87). 5. Garland of pearls, of gems;
- பூமாலை. ஒருகாழ் விரன்முறை சுற்றி (கலித். 54, 7). 6. Garland of flowers;
- நூற்சரடு. திருக்கோவை காழ்கொள (பரிபா. 6, 15). 7. Thread, string;
- விதை. வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகா (நாலடி, 243). 1. Seed;
- கொட்டை. ஈந்தின்காழ் கண்டன்ன (பெரும்பாண். 130). 2. Stone, nut, kernel, as of fruits;
- கனித்தோல். (பிங்.) 3. Skin, as of a fruit, rind;
- பருக்கைக்கல். (திவா.) 4. Gravel;
- கருமை. கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கறல் (சிறுபாண். 6). 1. Blackness;
- குற்றம். எக் காழுமிகந்துல கின்பமுற (காஞ்சிப்பு. கழுவாய். 300). 2. Blemsih, defect, fault;
- இரும்பிலி. (மலை.) 3. Box-leaved satin ebony. See
- விறகு. (பிங்.) 9. Firewood;
- காம்பு. காழெஃகம் பிடித்தெறிந்து (பதிற்றுப். 90, 37). 10. Handle, stem;
- கதவிற்செறியுந் தாழ். (திவா.) 8. Bolt, bar, as of a door;
- மரத்துண்டு. தேய்வை வெண்காழ் (புறநா. 369, 19). Piece of wood;
- மரவைரம். (திவா.) 1. Hardness; solidity, close grain, as of timber; core;
- மனவுறுதி. காழிலா மம்மர்கொள் மாந்தர் (நாலடி, 14). 2. Strength of mind;
- கட்டுத்தறி. கவைத்தாம்பு தொடுத்த காழூன் ற்ல்குல் (பெரும்பாண். 244). 3. Post to which a cow is tied;
- தூண். மாத்திரட்டிண்காழ் (நெடுநல். 111). 4. Pillar;
- ஓடஞ்செலுத்தற்குரிய தண்டு. வணங்குகாழ்வங்கம் புகும் (கலித் 92, 47). 5. Oar;
- இருப்புக் கம்பி. காழிற் சுட்ட கோழூன் (பொருந. 105). 6. Iron rod;
|