தமிழ் - தமிழ் அகரமுதலி
    காட்சி ; அழகு ; காணுதல் ; முன்னிலையில் வரும் ஒர் உரையசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காட்சி. காண்பிறந் தமைந்த காதல் (கம்பரா. திருவடிதொழு. 70). 1. Sight
  • அழகு. காண்டக...முகனமர்ந்து (திருமுரு. 250).- int. முன்னிலையில்வரும் ஓர் உரையசை. துவ்வாய்காண் (குறள், 1294). 2. Beauty; Expletive of the 2nd pers. meaning behold;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • V. (& காணு. I.) v. t. (past கண் டேன்) see, behold, find, பார்; 2. gain sight of God or a great person. தரிசி; 3. worship, venerate, வணங்கு; 4. perceive, feel, understand, உணரு; 5. discover, invent, கண்டறி; 6. look like resemble, ஒத்திரு; 7. tell, say, சொல்லு; v. i. seem, appear, தோன்று; 2. become visible, வெளிப்படு; 3. be sufficient, amount to, result (as profit) பலன்படு. அதைக்காணோம், it is not to be found; அப்படிக்காண்கிறது, so it seems. எத்தனை காணும், how much may it be, how much may be the produce or the amount. இது மூன்றுபேருக்குக் காணாது, this is not sufficient (enough) for three persons. அது மனசிலே காணவேண்டாம், don't take it amiss, சூடுகண்டால் உருகும், it will melt if it feels the heat. கண்டபடி செய்ய, to act arbitrarily, to act at random. கண்டபலன், the profit realized. கண்டுகொள்ள, to perceive, to visit. கண்டுங் காணாமை, connivance. கண்டு சந்திக்க, -பேச, -தரிசிக்க, to visit. கண்டுபாவிக்க, to imitate, to imagine. கண்டு பிடிக்க, to find, discover. கண்டுமுதல், produce in kind. கண்டு முதல்பண்ண, to collect the produce personally. கண்டெடுக்க, to pick up. காணடி, (colloq.) to lose, போக்கடி. காணப்பட, to appear, to be visible. காணப்படாதது, that which is invisible. காணப்போக, to go to see, to visit. காணாக்கடி, the bite of an unknown insect. காணாக்காட்சி, a rare sight. காணாஸ்தலம், the privities. காணாமல் திருட, to steal something silly away. காணாமல் போக, to be lost. காணாமை, invisibility. காணார், blind men; 2. enemies. காணும், (fut. 3rd per. neut.) it will appear; 2. in colloquial use equivalent to sir. போங்காணும், go, sir (expressing familiarity or slight). ஈரம்காண, to become moist. தரை ஈரங்கண்டிருக்கிறது, the floor is become moist. உண்மையைக்காண, to discover the truth. கைகண்டது, that which is tested and proved effectual or efficacious. கைகண்டமருந்து, a specific. காண்கை, v. n. knowledge; காண்பு, v. n. seeing, sight.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • ir. v. (காண, கண்டு) 1. paaru= பாரு 2. kaNTupiTi= கண்டுபிடி 1. see (unexpectedly); [see] 2. find out

வின்சுலோ
  • [kāṇ] கிறேன், கண்டேன், பேன், காண, ''v. a.'' To see, perceive, behold, view, descry, பார்க்க. 2. To gain sight of a deity, or a great person, the new moon. &c., மங் கலமாகக்காண. 3. To find, meet with, as certain, gain the knowledge of, be aware of, recognize, தெரிய. 4. To experience, know, feel, உணர. 5. To discover, invent, originate, கண்டறிய. 6. To think, consider, invistigate, ஆராய. 7. To obtain, get, se cure, have, derive, பெற. 8. To know the truth, perceive the deity in the vedas and other sacred writings, உண்மையறிய. 9. ''(p.)'' To worship, venerate, reverence, make obeisance, வணங்க. 1. To cause, do, effect, செய்ய. 11. To understand ful ly or perfectly, to have clear perceptions, தெளிய. 12. To preceive by any of the senses, see, hear, feel, &c., பொறியாலறிய. 13. ''v. n.'' To seem, prove, to be, to be found, to appear, தோன்ற. 14. To be sufficient, to amount to--as profit, &c., நிரம்ப. 15. To appear, become visible, evident, &c., வெளிப் பட. 16. To accrue, result--as profit, &c., பலன்பட. 17. ''(p.)'' To exist, subsist--as a quality, &c., உண்டாக. கண்டதுகாணப்பறைத்தலைவெட்டு. Strike the bushet as it comes, don't be exact. கண்டதைக்கண்டுகொள்ளும். Be content with what you get as profit, produce, &c. கண்டொன்றுகாணாமையொன்று. One thing be fore the face and another behind the back. சூரியனைக்கண்டஇருள்போல். Like darkness at the approach of the sun. பலகண்டங்கண்டு. Distributing into parts. சூடுகண்டாலுருகும். It will melt if it feel the heat. தூண்டுசுடரனையசோதிகண்டாய். Behold! a light as bright as a fresh trimmed lamp. அதென்னிடத்தில்லைகண்டீரா. I have none, did you not see. முனைவன்கண்டதுமுதனூலாகும். What the first author made is original. காணத்தோன்றஇடுதல்--காணத்தோன்றக்கொண் டுபோதல். Giving and taking in sufficient quantity. காணுங்காணாதாகக்கொடுத்தார். He gave hardly enough. The gerund corresponds with the word "seeing," அவர்குருவாயிருப்பதைக்கண்டு அ வர்சொற் கேட்கவேண்டும். Seeing he is a Guru, we must pay deference to his words. காண்டோழி. Hear, my female friend- spoken by a lady. அதுசெலவுக்குக்காணும். That will be suffi cient for the expense. சோற்றைக்காணக்காண அவனுக்குத்திமிரெடுக்கின்ற து. The more rice he gets, the more proud and insolent he becomes. தொகையைச்சதுரங்காணல். Squaring a num ber. புன்செய்யைநன்செய்காணல். Distinguishing the difference between the soils nanja and punja. காட்டைநகர்காணல். Transforming a forest to a city.
  • An expletive of the second person, ஓரிடைச்சொல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 13 v. [T. kānu, K.M. kāṇ.] tr. 1. To see, perceive, view, descry;பார்த்தல். காணிற் குடிப்பழியாம் (நாலடி, 84). 2.To gain sight of, as a deity, a great person, thenew moon; தரிசித்தல். திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் (திவ். இயற். 3, 1). 3. To discover, findout; கண்டறிதல். காணாதாற் காட்டுவான் தான்காணான்(குறள், 849). 4. To make, create; உண்டாக்குதல்.முனைவன் கண்டது (தொல். பொ. 649). 5. To perceive by the senses; பொறியாலறிதல். அவன் பேச்சைக் கண்டு (திருவாலவா. 16, 28). 6. To consider,investigate; ஆராய்தல். அறம்பொருள் கண்டார்க ணில்(குறள், 141). 7. To experience; அனுபவத்தில்அறிதல். 8. To regard; மதித்தல். தானெனக் கண்டும் (கல்லா. 51, 7). 9. To worship, venerate,reverence; வணங்குதல். (பிங்.) 10. To put toflight, drive away, as seeing the back ofenemies; புறங்காணுதல். நிலவுக் காண்பதுபோல(கலித். 119, 4). 11. To attain, obtain, get; பெறுதல். முற்று மிடங்கண்டபின் (குறள், 491). 12. Totell, say; சொல்லுதல். யாவருங் கண்ட நெறி (ஆசாரக். 17). 13. To look like, resemble; ஒத்திருத்தல்.மழைகாணு மணிநிறத்தோய் (கம்பரா. குகப். 26). 14.To befit; பொருந்துதல். மற்காணுந் திரடிண்டோள்(கம்பரா. குகப். 26).--intr. 1. To accrue, result;பலித்தல். இவ்வருஷம் சாகுபடி எவ்வளவு காணும்? 2.To appear, to be found, to become visible,evident; கண்ணுக்குத் தெரிதல். காண்கின்ற நிலமெல்லாம் யானேயென்னும் (திவ். திருவாய். 5, 6, 3). 3.To be sufficient; போதியதாதல். இப்பொருள் எத்தனைநாளைக்குக் காணும்.
  • < காண்-. n. 1. Sight; காட்சி.காண்பிறந் தமைந்த காதல் (கம்பரா. திருவடிதொழு. 70).2. Beauty; அழகு. காண்டக . . . முகனமர்ந்து (திருமுரு. 250).--int. Expletive of the 2nd pers.meaning behold; முன்னிலையில்வரும் ஓர் உரையசை. துவ்வாய்காண் (குறள், 1294).