தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோல் , மரக்கொம்பு ; கடலடுத்த உவர்நீர்ப்பரப்பு ; நுகத்துளையில் இடுங் கழி ; ஆயுதக்காம்பு ; யாழின் இசையெழுப்புங் கருவி ; வரிச்சல் ; நூற்சுருள் ; மிகுதி ; ஊன் ; கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கயிறு. கழிவிடும் பரிபிளந்து (தக்கயாகப்.132). Coir, rope;
  • கோல். ஆயர்மேய்க்குங் கழி (புலியூரந். 8). 1. Rod, cudgel, staff, stick;
  • நுகத்துளையில் இடுங்கழி. தென்கடலிட்ட தோர் நோன்கழி (சீவக. 2749). 2. Wooden peg to keep a yoke in place;
  • ஆயுதக் காம்பு. தோல் கழியொடு பிடிசெறிப்பவும் (புறநா. 98, 11). 3. [M. kaḻi.] Handle of a tool;
  • யாழின் இசையெழுப்புங் கருவி.(w.) 4. Lute-stick; plectrum;
  • வரிச்சல். கழிநிரைந்து (தேவா. 838, 4). 5. Lath, strip put across the rafters to support tiles;
  • நூற்சுருள். (w.) 6. Knot, tie, string, thread;
  • மாமிசம். கழிப்பிணிக் கறைத்தோல் (சிலப். 5, 81). 7. Flesh;
  • மிகுந்த. (நன். 456). Much, great excessive, extreme;
  • கடலையடுத்த உப்புநீர்ப் பரப்பு. மாக்கழி மலர்ந்த நெய்தலானும் (புறநா. 48, 3). 1. [M. kaḻi.] Backwater, shallow sea-waters, salt river, marsh;
  • உப்பளம். (பிங்.) 2. Salt-pan ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a branch of a tree, twig, switch, a stick, little staff, கொம்பு; 2. a small arm of the sea, salt river, salt marshes, உப்பாறு; 3. salt-pans, உப் பளம்; 4. a knot of thread or silk, நூற்சுருள்; 5. flesh, மாமிசம்; 6. handle of a tool; 7. adj. & adv. much excessive, மிகுதியான. கழிநிலம், saltish ground. கழிமுகம், the mouth of a river. கழியர், salt-makers. கழியவர், men of the maritime tracts. கழியூணன், a glutton. கழிபேருவகை, excessive joy.
  • II. v. i. pass (as time etc.) செல்லு; 2. pass away, கட; 3. go off by looseness, pass (as excrement), மலங்கழி; 4. expire, cease, die, சா; 5. be rejected, விலக்கப்படு; 6. be excessive, மிகு; 7. be in terror; v. t. resemble, ஒத் திரு; 2. pass through கட. அவனுக்கு வயிறு கழிகிறது, he has a looseness. நாள் கழிகிறது, days pass away. கழிகடை, கழிசிறை, the worst person or thing, refuse. கழிசடை, a person or thing cast away or considered worthless, as shaven hair. கழிசல், that which is rejected. கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், v. n. looseness, diarrhoea, cholera. கழிதல், v. n. passing away; dying; abundance. கழிபிறப்பு, the birth preceding the present. கழியுடல், the skeleton. கழிவு, v. n. passing, leaving; 2. that which is rejected or left, refuse; 3. subtraction; 4. anything inferior or vile; 5. discount. கழிவாய்ப்போக, to be cast out, to be rejected. கழிவாறு, a brook, a turn or winding of a river. கழிவான சரக்கு, inferior stuff; damaged goods. கழிவு நிலம், waste land. இரத்தக் கழிச்சல், bloody flux. கிராணிக்கழிச்சல், continued looseness.
  • VI. v. t. reject, throw aside, remove, அகற்று; 2. spend (time) போக்கு; 3. evacuate, discharge, emit, pass excrements, நீக்கு; 4. cut off, தறி; 5. subtract deduct, குறை; 6. remit, தள்ளிக்கொடு. கழித்தல், v. n. rejecting, subtraction. கழித்துக்கொடுக்க, to remit, make an allowance. கழிப்பு, v. n. casting out, rejection 2. offering to demons in exorcism; 3. refuse; 4. subtraction, கழிப்புக் கணக்கு. கழிப்புக் கழிக்க, to exorcise with certain ceremonies. கடனைக் கழித்துப்போட, to pay off the debt. காலத்தை வீணிலே கழிக்க, to spend time idly; to waste time. தழைகளைக் கழிக்க, to cut off the twigs and leaves. தீட்டுக் கழிக்க, to purify from cereminal uncleanness (as after childbirth etc.)

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • 6. kaRi= கழி reject; subtract, deduct; [spend (time)]

வின்சுலோ
  • [kẕi] ''s.'' A kind of thread, cotton, yarn, silk, &c., a hawk, a knot, a tie, நூற் சுருள். 2. Salt-pans, உப்பளம். 3. Shallow sea waters, salt rivers, salt marshes, உப் பாறு. 4. Lute-stick, stick for playing on the lute, a plectrum, யாழினையிசைக்குங்கருவி. 5. A rod, a cudgel, a staff, a branch, a twig, a switch, கொம்பு. 6. ''adj.'' and ''adv.'' Much, great, excessive, very extensive, மிகுதி. 7. ''[prov.]'' A roll of sealing wax, lunar caus tic, &c., மெழுகுவர்த்தி.
  • [kẕi] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. n.'' To pass by, pass from, go, remove, depart from, to pass through or over a river, &c., to pass away, lapse, கடக்க. 2. To pass at time, a season, prosperity, adver sity, &c.; to elapse, become spent, செல்ல. 3. To pass--as excrements, மலங்கழிய. 4. To be discharged, voided--as semen, &c., விந்துகழிய. 5. To be separated or detached from, நீங்க. 6. To be abated, deducted, discounted, &c., ஒழிய. 7. To be rejected, exempted, released, excused, &c., விலக்கப் பட. 8. ''(p.)'' To be excessive, copious, abundant, intense, to be great in quality or quantity, மிக. 9. To expire, cease, die, சாவ. சந்தைகழிந்தது. The market is broken up, the fair is over. அவனுக்குவயிறுகழிகிறது. He has a looseness.
  • [kẕi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To reject, expel, cast off, discard, exclude, dislodge, remove, strip off, sep arate from, detach, climinate, அகற்ற. 2. To evacuate, void, discharge, emit, pass excrements, நீக்க. 3. To except, leave as refuse, abandon, ஒழிக்க. 4. ''[in arithmetic.]'' To subtract, subduct, கணக்குக்கழிக்க. 5. To deduct, abate, குறைக்க. 6. To discount, remit, தள்ளிக்கொடுக்க. 7. To cut off-as the hair, to pare off the nails, &c., to clear off, clear away, smooth off--as knots by cutting; to prune, lop off, தழைமுதலியனகழிக்க. 8. To cast off--as exuvi&ae;, கழற்ற. 9. To pass time, spend time, காலம்போக்க. 1. To exempt, release, free from duties--as post age, விலக்க. கட்டிக்கழித்தபுடவை. Cast-off garments. சாத்திக்கழித்தமாலை. Garlands formerly put on an idol taken off before another cere mony. காலத்தைவீணிலேகழித்துவிட்டான். He spent his time in vain. மாடுதின்றுகழித்தது. The cow having eaten enough, rejected what remained. உறைகழித்தவொள்வாள். Glittering drawn swords.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கழி-. 1. [M. kaḻi.] Back-water, shallow sea-waters, salt river, marsh;கடலையடுத்த உப்புநீர்ப் பரப்பு. மாக்கழி மலர்ந்த நெய்தலானும் (புறநா. 48, 3). 2. Salt-pan; உப்பளம்.(பிங்.).
  • n. < கழி-. 1. Rod, cudgel, staff,stick; கோல். ஆயர்மேய்க்குங் கழி (புலியூரந். 8).2. Wooden peg to keep a yoke in place;நுகத்துளையில் இடுங்கழி. தென்கடலிட்ட தோர் நோன்கழி (சீவக. 2749). 3. [M. kaḻi.] Handle of atool; ஆயுதக் காம்பு. தோல் கழியொடு பிடிசெறிப்பவும் (புறநா. 98, 11). 4. Lute-stick; plectrum;யாழின் இசையெழுப்புங் கருவி. (W.) 5. Lath,strip put across the rafters to support tiles;வரிச்சல். கழிநிரைத்து (தேவா. 838, 4). 6. Knot,tie, string, thread; நூற்சுருள். (W.) 7. Flesh;மாமிசம். கழிப்பிணிக் கறைத்தோல் (சிலப். 5, 81).
  • adj. Much, great, excessive,extreme; மிகுந்த. (நன். 456.)
  • n. Coir, rope; கயிறு. கழிவிடும்பரிபிளந்து (தக்கயாகப். 132).