தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சகம் ; பொய் ; களவு ; குற்றம் ; அவிச்சை ; புண்ணிலுள்ள அசறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய். கள்ளமே பேசி (தேவா. 1115,6). 2. Lie, falsehood;
  • பாதகம். (w.) 7. Villainy, knavery, perfidy;
  • அவிச்சை. ஞானத்தீயாற் கள்ளத்தைக் கழிய நின்றார் (தேவா. 1103,1). 5. Spiritual ignorance;
  • குற்றம். 4. Fault, defect, blemish;
  • களவு. (சூடா.) 3. Stealing, robbery, fraud, embezzlement;
  • புண்ணினுள்ள அசறு. Loc. 6. Morbid matter concealed in a boil or lodged in the system causing irritation;
  • வஞ்சனை. கள்ளம் பிறவோ பசப்பு (குறள், 1184). 1. Guile, deception, dissimulation, trickishness; secrecy, slyness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கள்ளத்தனம், s. falsehood, lie, பொய்; 2. theft, robbery, களவு; 3. slyness, trickishness, கபடம்; 4. deception, வஞ்சனை; 5. the morbid matter in a boil புண்ணசறு. கள்ள அறை, a secret drawer. கள்ள ஒப்பம், -க்கையெழுத்து, a forged singnature, forgery. கள்ளக்கதவு, a trap door. கள்ளக்கும்பிடு, -க்கும்பீடு, hypocritical civility. கள்ளச் சரக்கு, smuggled goods. கள்ளச் சாட்சி, false evidence; one who gives false evidence. கள்ளச்சாதி, the Kallar tribe. கள்ளஞானம், false philosophy. கள்ளத்திறவுகோல், a pick-lock, a false key. கள்ளத்தீர்க்கதரிசி, (chr. us), a false prophet. கள்ளநிருபம், pseudo--epistle. கள்ளப்படி, a false measure. கள்ளப்பணம், counterfeit coin. கள்ளப் புருஷன், a woman's paramour. கள்ளப்பெண்சாதி, -ஸ்திரி, a concubine, an illegitimate wife. கள்ளப்பேச்சு, insincere talk. கள்ளமயிர், a wig, false hair. கள்ளமனம், deceitful mind. கள்ளமார்க்கம், false religion. கள்ளர்பற்று, the district of the Kallars. கள்ளன், கள்வன் (pl. கள்ளர்; fem. கள்ளி, கள்ளச்சி), a thief, a rogue, a wicked fellow; 2. one of the Kallar tribe. ஆசாரக்கள்ளன், a hypocrite. மாசாலக்கள்ளி, மாயக்கள்ளி, a dissimulating, unfaithful woman. வேசிக்கள்ளன், a whoremonger. வேலைக்கள்ளி, a lazy maid.

வின்சுலோ
  • [kḷḷm] ''s.'' Guile, treachery, decep tion, imposition, dissimulation, insidious ness, roguery, villany, knavery, turpitude, spuriousness, counterfeitness, perfidy, de pravity, வஞ்சகம். 2. Stealing, robbery, fraud, embezzlement, shuffling, tricking, cheating, circumvention, intrigue, களவு. 3. Lying, falsehood, பொய். 4. Fault, crime, guilt, defect, blemish, குற்றம். 5. Morbid matter concealed in a boil, or lodged in the system and causing irritation, புண்ணினுட் கள்ளம். 6. Unlawful, illicit acts, slyness, trickishness, sinister views, under-hand way of doing things, covert, கபடம். கள்ளவெயிலுங்கள்ளமழையும். Alternate rain and sun-shine when neither can be relied on.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கள்-. [T.kalla, M.kaḷḷam.] 1. Guile, deception, dissimulation,trickishness; secrecy, slyness; வஞ்சனை. கள்ளம்பிறவோ பசப்பு (குறள், 1184). 2. Lie, falsehood;பொய். கள்ளமே பேசி (தேவா. 1115, 6). 3. Stealing, robbery, fraud, embezzlement; களவு.(சூடா.) 4. Fault, defect, blemish; குற்றம். 5.Spiritual ignorance; அவிச்சை. ஞானத்தீயாற் கள்ளத்தைக் கழிய நின்றார் (தேவா. 1103, 1). 6. Morbidmatter concealed in a boil or lodged in thesystem causing irritation; புண்ணினுள்ள அசறு.Loc. 7. Villainy, knavery, perfidy; பாதகம். (W.)