தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடுப்புக்கரி ; நிலக்கரி ; கரிந்தது ; கருமையாதல் ; மிளகு ; நஞ்சு ; மரவயிரம் ; யானை ; பெட்டைக் கழுதை ; சான்று கூறுவோன் ; சான்று ; விருந்தினன் ; பயிர் தீய்கை ; வயிரக்குற்றங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடுட்புக்கரி. (திவா.) 1. Charcoal;
  • பயிர்தீகை. கரியுள்ளகாலத்து (T. A. S. iii, 62). 1. Failure of crops;
  • வயிரக்குற்றங்களுள் ஒன்று. (சிலப். 14, 180, உரை.) 2. A flaw in diamonds;
  • கரிந்தது. 2. Charred wood snuff of a lamp;
  • நஞ்சு. (மூ.அ.) 3. Poison;
  • கண்ணிடும் மை. கரிபோக்கினாரே (சீவக. 626). 4. Black pigment for the eye;
  • மரவைரம். (W.) 5. The hard part of timber;
  • யானை. கொடுங்கரிக் குன்றுரித்து (திருவாச. 6, 19). Elephant;
  • பெட்டைக் கழுதை. (நீலகேசி.) She-ass;
  • சாட்சி கூறுவோன். இந்திரனே சாலுங் கரி (குறள், 25). 1. Witness;
  • சாட்சியம். கரிபோக்கினாராதலானும் (தொல். பொ. 649, உரை). 2. Proof, evidence, testimony;
  • விருந்தின-ன்-ள். கரியுடனுண்ணார் (கல்லா. 92, 8). 3. Guest;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. charcoal, cinder, நெருப்புக் கரி; 2. blackness, கருமை; 3. witness, சாட்சி; 4. poison, நஞ்சு; 5. the hard part of timber, மர வைரம்; 6. guest, விருந் தாளி; 7. black pigment for the eye. கரிக்கட்டை, a quenched fire brand. கரிகறுக்க, --கறுத்துப்போக, to grow very black or dark. கரிகறுத்தது, --கறுத்துப்போயிற்று, it is become as black as charcoal. கரிகறுத்த முகம், a face as black as charcoal. கரிக்காரன், a charcoal dealer. கரிக்குருவி, a small black bird. கரிக்கோடிட, to form or grow as hair above the upper lip கரிச்சட்டி, --ப்பானை, smutty pots. கரிநாள், an inauspicious day. கரிநெருப்பு, fire made of charcoal. கரியமிலவாயு, carbonic acid gas. நிலக்கரி, coal. கரியவன், a dark man; 2. Vishnu; 3. Indra; 4. Saturn; 5. robber, thief; 6. one who gives evidence as witness.
  • s. (கரம்) the elephant, யானை. கரிமுகன், Ganesa, the elephant faced. கரிவாகனன், Iyenar, Indra.
  • II. v. i. be scorched, burnt or charred as food, காந்து; 2. turn black, become charcoal, கருகு; 3. be scorched by the sun, தீய்; 4. blacken with rage, கோபி.
  • VI. v. t. (caus. of கரி II.) char. எரித் துக் கரியாக்கு; 2. season, as curries with ghee or oil or spices, தாளி.
  • VI. v. i. be saltish, உப்புக்கரி, 2. be pungent to the taste, உறை; 3. smart as the eye, உறுத்து; 4. feel an irritating sensation in the throat due to acidity of the stomach; v. t. nag, worry, குற்றங்கண்டு குறைகூறு; 2. shun, despise, வெறு. கரிப்பு, v. n. saltishness, pungency, smarting, acute pain in the eye; scarcity, famine.

வின்சுலோ
  • [kri] ''s.'' Elephant, யானை. Wils. p. 193. KARIN. ''(p.)''
  • [kri] ''s.'' Charcoal, நெருப்புக்கரி. 2. Blackness, crock, snuff of a lamp &c., கரு மை. ''(c.)'' 3. ''(p.)'' Poison, நஞ்சு. 4. The hard part of timber, வைரம். 5. Witness, evidence, testimony, சாட்சி, 6. Example illustration, திருட்டாந்தம். மயிர்ச்சுட்டுக்கரியாகுமா. Can charcoal be made of hair? i. e. what profit can accrue from mean savings, &c. அவளொருகரிநாய். She is a black dog; i.e. she is an ugly creature.
  • [kri] கிறது, ந்தது, யும் ய, ''v. n.'' To be scorched, to be burnt--as food in cook ing, காந்த, 2. To be burnt to blackness, to be charred to become charcoal, கருக. 3. To be scorched by the sun--as vegeta bles, தீய. 4. To blacken with rage, to be angry, பெருங்கோபமுற. ''(p.)''
  • [kri] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To taste salt, saltish, உப்புக்கரிக்க, 2. To be pun gent to the taste, உறைக்க, 3. To smart-as the eyes by contact with acids, &c., கண்க ரிக்க. 4. To season curries with ghee, spi ces, &c., தாளிக்க. இந்தத்தண்ணீரிலுப்புக்கரிக்கிறது. This water is brackish. கண்ணிலெண்ணெய்கரிக்குமா பிடரியிற் கரிக்குமா... Will the nape or the eyes smart by oil?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரு-மை. [T. K. M. Tu. kari.]1. Charcoal; அடுப்புக்கரி. (திவா.) 2. Charredwood, snuff of a lamp; கரிந்தது. 3. Poison;நஞ்சு. (மூ. அ.) 4. Black pigment for the eye;கண்ணிடுமை. கரிபோக்கினாரே (சீவக. 626). 5. Thehard part of timber; மரவைரம். (W.)
  • n. < karī nom. sing. of karin.Elephant; யானை. கொடுங்கரிக் குன்றுரித்து (திருவாச. 6, 19).
  • n. < kharī. She-ass; பெட்டைக்கழுதை. (நீலகேசி.)
  • n. [T. kari.] 1. Witness; சாட்சிகூறுவோன். இந்திரனே சாலுங் கரி (குறள், 25). 2.Proof, evidence, testimony; சாட்சியம். கரிபோக்கினாராதலானும் (தொல். பொ. 649, உரை). 3. Guest;விருந்தின-ன்-ள். கரியுடனுண்ணார் (கல்லா. 92, 8).
  • n. < கரி-. 1. Failure of crops;பயிர்தீகை. கரியுள்ளகாலத்து (T. A. S. iii, 62). 2.A flaw in diamonds; வயிரக்குற்றங்களுள் ஒன்று.(சிலப். 14, 180, உரை.)