தமிழ் - தமிழ் அகரமுதலி
    சினத்தல் ; பிளத்தல் ; ஓடுதல் ; விரைதல் ; மிகுதல் ; கடுமையாதல் ; கோணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதல். கதழொளி (சீவக. 1749). 3. To abound;
  • உக்கிரமாதல். இந்தனங் கதழவிட்டு (கந்தபு. மாயையுப. 19). 2. To be furious; to rage, as fire;
  • விரைதல். கதழெரி சூழ்ந்தாங்கு (கலித். 25, 4). 1. To be hasty, impetuous; to run swiftly;
  • பிளத்தல். கனகனாகிய கடுந்திறலோ னெஞ்சு கதழ்ந்த (பாகவத. 1, மாயவ. 31).-intr. 2. To cleave, cut into two;
  • கோபித்தல். (திவா.) 1. To be angry with, displeased with;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. prob. கதம். cf. கதவு-.tr. 1. To be angry with, displeased with; கோபித்தல். (திவா.) 2. To cleave, cut into two; பிளத்தல்.கனகனாகிய கடுந்திறலோ னெஞ்சு கதழ்ந்த (பாகவத. 1,மாயவ. 31).--intr. 1. To be hasty, impetuous;to run swiftly; விரைதல். கதழெரி சூழ்ந்தாங்கு (கலித்.25, 4). 2. To be furious; to rage, as fire; உக்கிரமாதல். இந்தனங் கதழவிட்டு (கந்தபு. மாயையுப. 19).3. To abound; மிகுதல். கதழொளி (சீவக. 1749).