- s. a debt, loan of money or goods, இருணம்; 2. duty, கடமை; 3. nature, natural attribute, இயல்பு; "கடனென்ப நல்லவையெல்லாம்" குறள்; 4. order, plan, system, முறைமை; 5. observances such as the daily ablutions and other devotional exercises enjoined by religion, வைதிகக்கிரியை; 6. honour, மானம்; 7. measure, definite quantity அளவை; 8. tribute, tax, கப்பம், வரி. கடனுக்குப் பாதகனாய்ப் போனான், he is involved in debt or deeply indebted. அது என்மேல் விழுந்த கடன், that is my duty. கடனாக, as a loan. கடனாளி, one who is obliged to do a thing; a debtor. கடன் கட்டு, doing a thing for form's sake only. கடன் கட்டாய்ப்பேச, to speak roughly. கடன் கழிக்க, to perform a duty. கடன்காரன், a debtor or a creditor. கடன் கேட்க; to solicit a loan, to demand the payment of a loan. கடன் கொடுக்க, to lend. கடன் கொடுத்தவன், a creditor. கடன் சிட்டு, a bond. கடன் தீர்க்க, --அடைக்க, --இறுக்க, -- நிவிர்த்திக்க, to pay a debt, to discharge a debt. கடன்பட, to run into debt. கடன் பட்டவன், a debtor. கடன்வாங்க, to borrow. செய்கடன், duty.
|