தமிழ் - தமிழ் அகரமுதலி
    செலுத்துதல் ; நீங்கச்செய்தல் ; புகுத்துதல் ; செய்துமுடித்தல் ; அழித்தல் ; காலந்தாழ்த்துதல் ; நூலால் இழையிடுதல் ; கட்டடத்தில் பூசிய சாந்தை வழுவழுப்பாகத் தேய்த்தல் ; கலத்தல் .

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓட்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. of ஓடு-. 1.To cause to run; to drive, propel; to steer, as avessel; செலுத்துதல். நும்மூர்த் தெருவதனி லோட்டுவேன் (கந்தபு. வள்ளி. 136). 2. To drive away,put to flight, chase, expel, disperse, as ignorance, as darkness; நீங்கச்செய்தல். பேயையோட்டிவிட்டான். 3. To pass in, insert; புகுத்துதல்.உரைத்தது செவியிற் காய்ந்த நாராச மோட்டியதென(அரிச். பு. மீட்சி. 30). 4. To destroy; அழித்தல்.அடுகள மார்ப்ப வமரோட்டி (பு. வெ. 9, 5). 5. Tofinish, complete; செய்துமுடித்தல். உரவு நல்லணையோட்டிய வூற்றமும் (கம்பரா. ஒற்றுக். 40). 6. Todelay; காலந்தாழ்த்தல். ஓட்டியுங் கோறு மன்றே(சீவக. 1741). 7. To darn; to stitch a runningstitch; நூலால் இழையிடுதல். ஓரிழை யோட்டிக்
    -- 0620 --
    கொடு. 8. To polish a plastered wall with afloat; கட்டடத்துப் பூசியசாந்தை வழுவழுப்பாகக்கொத்துக்கரண்டி முதலியவற்றில் தேய்த்தல். இந்தச்சுவரை நன்றாய் ஓட்டவேண்டும். Loc.