ஒழிதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிதல் ; சாதல் ; நீங்கல் ; தவிர்தல் ; விடுதல் ; வெறுமையாதல் ; எஞ்சுதல் ; தங்குதல் ; ஓய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேலைசெய்யாது சும்மாவிருத்தல். ஒழிந்தவேளையில் வா. 8. To be at leisure;
  • விட்டு நீங்குதல். இற்பிறப்பு நாணு மிடையொழிய (பு. வெ. 7, 27). 7. To leave off, forbear;
  • தவிர்தல். 6. To be excepted;
  • தீர்மானமாதல். தமக்கொழிமரபின் . . . நல்லறம் (மணி. 16, 110). 5. To be settled, decided;
  • வெளிச்செல்லாது தங்குதல். அரசர் வாய்மொழி நம்பா லொழிகுவதாயின் (சிலப். 26, 11.) 4. To remain;
  • சாதல். ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய (புறநா. 2, 15). 3. To die, perish;
  • அழிதல். ஒழிந்திடு மணுரூபங்கள் (சி. சி. 1, 11). 2. To decline; to become extinct, annihilate;
  • தீர்தல். பொய்க்கோலஞ் செய்ய வொழியுமே (நாலடி, 43). 1. To cease, desist, stop; to discontinue; to be finished, ended;
  • வெறுமையாதல். இந்த வீடு ஒழிந்திருக்கிறது. ஓர் துணைவினை. கெடுத்தொழிந்தனை யென்னையு முன்னையும் (கம்பரா. இரணியன். 24). 9. To be empty, unoccupied; - aux. Auxiliary verb;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • [M. oḻi.] 4 v. intr. 1. Tocease, desist, stop; to discontinue; to befinished, ended; தீர்தல். பொயக்கோலஞ் செய்யவொழியுமே (நாலடி, 43). 2. To decline; to become extinct, annihilated; அழிதல். ஒழிந்திடு மணுரூபங்கள் (சி. சி. 1, 11). 3. To die, perish; சாதல்.ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய (புறநா. 2, 15).4. To remain; வெளிச்செல்லாது தங்குதல். அரசர்வாய்மொழி நம்பா லொழிகுவதாயின் (சிலப். 26, 11).5. To be settled, decided; தீர்மானமாதல். தமக்கொழிமரபின் . . . நல்லறம் (மணி. 16, 110). 6. Tobe excepted; தவிர்தல். 7. To leave off, forbear;விட்டு நீங்குதல். இற்பிறப்பு நாணு மிடையொழிய (பு.வெ. 7, 27). 8. To be at leisure; வேலைசெய்யாதுசும்மாவிருத்தல். ஒழிந்தவேளையில் வா. 9. To beempty, unoccupied; வெறுமையாதல். இந்த வீடுஒழிந்திருக்கிறது.--aux. Auxiliary verb; ஓர் துணைவினை. கெடுத்தொழிந்தனை யென்னையு முன்னையும்(கம்பரா. இரணியன். 24).