- 5 v. intr. < ஒன்று.[M. oruṅṅu.] 1. To be concentrated; to havea singleness of aim or purpose; ஒருபடியாதல்.நினதா ளொருங்கப்பிடித்து (திவ். திருவாய். 5, 8, 8). 2.To join together;ஒன்றுகூடுதல். மருத்து மிரும்புனற்கிறைவரு மாகிச் செவ்விதி னொருங்கி (கந்தபு. சூரனரசிரு. 11). 3. To sink, decline; to becomereduced; ஒடுங்குதல். உரமொருங்கியது . . . வாலியது மார்பு (கம்பரா. யுத்தய மந்தி. 90). 4. To beruined, to perish; அழிதல். நமரெல்லோரு மொருங்கினர் சமரில் (பிரபோத. 38, 1).
|