தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்பு ; ஒத்த பாவனை ; போலி ; அழுகைப்பாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பு. அவரன்ன ஒப்பாரி (குறள், 1071). 1. Equal, peer;
  • அழுகைப்பாட்டு. மகனேயென் றொப்பாரிசொன்னாள் (இராமநா. உயுத்த. 81). Lamentation by women making doleful reference to the personal appearance and good qualities of the deceased;
  • போலி. நாளு மொப்பாரியாய்வந்த புத்துறவுக்கு நன்மைபலவே செய்குவார் (அறப். சத. 30). 2. Pretence, hoax, imposture;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. comparison, ஒப்பு; 2. a funeral elegy, lamentation (abounding with comparisons) ஒப்புச்சொல்லி அழுதல், அழுகைப் பாட்டு. ஒப்பாரிகொள்ள, --பிடிக்க, to esteem one as a near relation for his resemblance to a deceased member of the family. ஒப்பாரிக்காரன், (fem. ஒப்பாரிக்காரி) the person so esteemed ஒப்பாரிசொல்ல, --இட்டழ, --இட --வைக்க, to bewail the death of a relation.

வின்சுலோ
  • [oppāri] ''s.'' Comparison, similarity, likeness, ஒத்தபாவனை. 2. A funeral elegy, lamentation or episode sung by women and abounding with comparisons be tween the deceased and other objects, அ ழுகையிலொப்பனையிடுகை. மக்களே போல்வர்கயவர்அவரன்னவொப்பாரியாங்க ண்டதில். The base among men are formed like others, we see no two classes of beings that so much resemble each other. (குறள்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆர்-. [K. oppāri.]1. Equal, peer; ஒப்பு. அவரன்ன ஒப்பாரி. (குறள்,1071). 2. Pretence, hoax, imposture; போலி.நாளு மொப்பாரியாய்வந்த புத்துறவுக்கு நன்மைபலவேசெய்குவார் (அறப். சத. 30).
  • n. prob. ஒப்ப + ஆரி-.Lamentation by women making doleful reference to the personal appearance and goodqualities of the deceased; அழுகைப்பாட்டு. மகனேயென் றொப்பாரிசொன்னான் (இராகநா. உயுத்த. 81).