தமிழ் - தமிழ் அகரமுதலி
  ஒன்று என்னும் எண் ; மதிப்பிற்குரியபொருள் ; வீடுபேறு ; ஒற்றுமை ; வாய்மை ; அறம் ; அஃறிணையொருமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • விகற்பப்பொருளைக்காட்டும் இடைச்சொல். ஒன்று தீவிணையை விடு, ஒன்று அதன்பயனை நுகர். 9. That which is incomparable; ஒப்பற்றது. - conj. Or; else;
 • அஃறிணை யொருமைப்பால். (நன். 263.) 8.(Gram.) Singular number of the impersonal class;
 • சிறுநீர். ஒன்றுக்குப் போய்வா. Colloq. 7. Euphemism for urination;
 • இந்திரியம். இரண்டடக்கார் ஒன்று பலகாலமும் விட்டிடார் (திருவேங். சத. 74). 6. Semen;
 • வாய்மை. ஒன்றுரைத்து (கம்பரா. கிளை. 24). 5. Truth;
 • வீடுபேறு. (திவா.) 3. Attaining salvation;
 • மதிப்புக்குரிய பொருள். ஒறுத்தாரை யொன்றாக வையாரே (குறள், 155). 2. A person of consequence, a person worthy of regard;
 • க என்னும் எண். (திவ். திருச்சந். 7.) 1. The number one;
 • ஒற்றுமை. வேந்தர்வேந்த னிதயமு மொன்றாய்நின்ற னியற்கையை (பாரத. சூதுபோர். 7). 4. Union;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. one, one thing. நான் சொன்னதொன்று, அவன் செய்த தொன்று, I told him one thing and he did another. மனம் ஒன்று வாக்கொன்று, in him word and thought differ. ஒன்று பாவத்தை விடு, ஒன்று நரகத்தில் வேகு, either forsake sin or burn in hell. ஒன்றில் இதைவாங்கு, ஒன்றில் அதை வாங்கு, take either this or that. ஒன்று தங்கிப்போகவேண்டும், you must halt one night on the road. ஒன்றால் ஒன்றுக்குக் குறைவில்லை, I stand not in need of anything whatsoever. ஒன்றடி மன்றடி, colloq. ஒண்ணடி மண் ணடி, promiscuousness, confusion, disorder. ஒன்றன்பால், (in gram.) neuter singular. ஒன்றாய், altogether. ஒன்றான குமாரன், the only son. ஒன்றுக்குப்போக, to make water, ஒன் றுக்கிருக்க. ஒன்றுக்குள் ஒன்று, one among another; mutually; nearest relations. ஒன்றுக்கொன்று, to or for each other. ஒன்றுக்கொன்று வித்தியாசம், different one from another. ஒன்றுபட, to be united; become reconciled. ஒன்றுபடுத்த, to bring about a union, to reconcile. ஒன்றுபாதியாய் விற்க, to sell at halfprice or at a low price. ஒன்றும், (with a neg. verb) nothing. ஒன்றுமற்றவன், a very poor person, a useless person. ஒன்றுமில்லை, there is nothing. ஒன்றுவிட்டதம்பி, (அண்ணன்) a cousin. ஒன்றுவிட்டொரு நாள், every other day, alternate days. ஒன்றேயொன்று, one only. ஒவ்வொன்று, each. ஒவ்வொன்றாய், one by one.
 • III. v. i. unite, join, coalesce, இணை; 2. agree, suit, பொருந்து; 3. set one's mind solely on an abject, ஒருமுகப்படு; 4. be similar, resemble, உவமையா. இப்படிச்செய்ய ஒன்றாது (ஒன்னாது) it is not proper or convenient to do so. ஒன்றார், ஒன்னாதார், ஒன்னார், ஒன்னலர், foes. ஒன்றுநர், friends, relations. ஒன்றிப்போக, to become united, to grow conformable. ஒன்றுகுடி, a family or person living in another's house. ஒன்றுகை, v. n. uniting, union. ஒன்றுபடு, coalesce, become reconciled. ஒன்றுபாதி, a half; 2. roughly half; 3. midnight; நடுச்சாமம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஏகம்.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
 • oNNu ஒண்ணு one, one thing (n.)

வின்சுலோ
 • [oṉṟu] ''s.'' One (the numeral), ஒன் றென்னுமெண். 2. One thing, அஃறிணையொரு மை. 3. Union, coalescence, ஐக்கம். 4. In construction, it means either, or--as ஒன் றுதீவினையைவிடு, ஒன்றுஅதின்பயனைநுகர், either abandon your evil deeds, or take the conse quences. ஒன்றத்தனைகொடுத்தால்நானிரண்டத்தனைகொடுப் பேன். If he has given once as much, I will give twice. ஒன்றாறுகிறானில்லை. He so wonders that he knows not when to cease extolling. 2. His sorrow, regret, &c. is unremitted. ஒன்றிலிருந்தொன்றிலேபாய்தல். Talking loose ly, incoherently, jumping from one thing to another. ஒன்றினுளொன்று. One among another, re ciprocally, mutually. ஒன்றுகேள். Listen to a word of advice, hear what I have to say. ஒன்றுக்குமசையான். He is moved by nothing. ஒன்றுமொன்றுமிரண்டென்றுதெரியாதவன். A person so ignorant that he cannot tell that one and one make two. ஒன்றுவிட்டொருநாள். Every other day, al ternate days. ஒன்றேயொன்று. One only. ஒன்றோஅவனாலேகேடு. Have I sustained but one loss by him? நான்சொன்னதொன்று, அவன்செய்ததொன்று. I told him one thing and he did another. மனமொன்றுவாக்கொன்று. His profession is one thing and intention another.
 • [oṉṟu] கிறேன், ஒன்றினேன், வேன், ஒன்ற. ''v. n.'' To unite, coalesce, knit or grow together--as broken parts, two trees, &c.; to become one, to join, combine, இணைய. 2. To be engaged, be intent, &c. on an object, ஒன்றுபட. 3. To agree, suit, be agreeable, பொருந்த. 4. To copulate, புணர. ஒன்றவில்லை. It is not convenient. 2. They are not fit. 3. (They) (the things or parts) are not united, not joined well, &c. தேகத்தொன்றுநோய். Disease which befalls the body. (வைராக்கிய.) ஊழொன்றியிருப்பின். If destiny favor-

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. [T. oṇḍu, K. ondu, M.onnu, Tu. onji.] 1. The number one; க என்னும் எண். (திவ். திருச்சந். 7.) 2. A person ofconsequence, a person worthy of regard; மதிப்புக்குரிய பொருள். ஒறுத்தாரை யொன்றாக வையாரே(குறள், 155). 3. Attaining salvation; வீடுபேறு.(திவா.) 4. Union; ஒற்றுமை. வேந்தர் வேந்த னிதயமு மொன்றாய்நின்ற வியற்சையை (பாரத. சூதுபோர்.7). 5. Truth; வாய்மை. ஒன்றுரைத்து (கம்பரா.கிளை. 24). 6. Semen; இந்திரியம். இரண்டடக்கார்ஒன்று பலகாலமும் விட்டிடார் (திருவேங். சத. 74). 7.Euphemism for urination; சிறுநீர். ஒன்றுக்குப்போய்வா. Colloq. 8. (Gram.) Singular numberof the impersonal class; அஃறிணை யொருமைப்பால். (நன். 263.) 9. That which is imcomparable; ஒப்பற்றது. -- conj. Or; else; விகற்பப்பொருளைக்காட்டும் இடைச்சொல். ஒன்று தீவினையைவீடு, ஒன்று அதன்பயனை நுகர்.