தமிழ் - தமிழ் அகரமுதலி
  நடு ; பொருத்தல் ; ஒத்துதல் ; தகுதியாதல் ; ஒற்றுமைப்படுதல் ; கேள்வியால் தெளிந்தவற்றில் மனம் ஊன்றி நிற்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • போலுதல். உறுப்பொத்தல் மக்களொப்பன்றால் (குறள், 993). 1. To resemble;
 • சமமாதல். உயர்வொப்பில் லாதவர். தகுதியாதல். ஒப்ப நாடி யத்தக வொறுத்தி (புறநா. 10, 4). சம்மதமாதல். அவனுக்கு ஒத்த விஷயம். 2. To equal; -intr. 1. To be suited to; to be consistent with; to be appropriate; 2. To be acceptable;
 • இல்லாததொன்று இருந்தாற்போலுதல். கமலபாதம் வந்தென் கண்ணினுள்ளன வொக்கின்றதே (திவ். அமலனாதி. 1) 5. To appear as if it were;
 • ஒற்றுமைப்படுதல். எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம். 4. To be harmonious, be in happy concord;
 • ஒழுக்கமுடையராதல். ஒப்பார்மற்றெனைவர் (சீவக. 1543). 3. To be of good character; to be well behaved;
 • கேள்வியால் தெளிந்தவற்றில் மனம் ஊன்றிநிற்கை. (பிங்.) 1. Conduct or behaviour in strict conformity with one's own convictions or settled persuasion, one of kēḷvi;
 • நடு. (திவா.) 2. Middle, centre;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • 11 v. [M. okku.] tr. 1. Toresemble; போலுதல். உறுப்பொத்தல் மக்களொப்பன்றால் (குறள், 993). 2. To equal; சமமாதல். உயர்வொப்பில் லாதவர்--intr. 1. To be suited to; to beconsistent with; to be appropriate; தகுதியாதல்.ஒப்ப நாடி யத்தக வொறுத்தி (புறநா. 10, 4). 2. Tobe acceptable; சம்மதமாதல். அவனுக்கு ஒத்த விஷயம். 3. To be of good character; to be well-behaved; ஒழுக்கமுடையராதல். ஒப்பார்மற்றெனைவர்(சீவக. 1543). 4. To be harmonious, be in happyconcord; ஒற்றுமைப்படுதல். எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம். 5. To appear as if it were; இல்லாததொன்று இருந்தாற்போலுதல். கமலபாதம் வந்தென் கண்ணினுள்ளன வொக்கின்றதே (திவ். அமலனாதி.1).
 • n. < ஒ-. 1. Conduct orbehaviour in strict conformity with one's ownconvictions or settled persuation, one of kēḷvi;கேள்வியால் தெளிந்தவற்றில் மனம் ஊன்றிநிற்கை.(பிங்.) 2. Middle, centre; நடு. (திவா.)