தமிழ் - தமிழ் அகரமுதலி
    இணைக்கப்பட்டது ; இணைப்பு ; சார்பு ; நட்பு ; மரப்பட்டை ; மரவொட்டு ; ஓரம் ; பறவை பிடிக்கும் கண்ணி ; ஒட்டுக்கடுக்கன் ; ஒட்டுத்திண்ணை ; படை வகுப்பு ; அற்பம் ; நற்சமயம் ; சூள் ; துணை ; இகலாட்டம் ; ஓரணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படைவகுப்பு. (திவா.) 11. Division of an army, battle array;
  • வரி. வேறு ஒட்டுக்கொண்டு வருகிற நிலத்துத் தரம்பெற்ற நிலம் (S. I. I. viii, 23). 1. Tax;
  • தொகைநிலைச் சொல். அறுவகை ஒட்டு வகுத்து (தொல். சொல். 1, இளம்பூ.). 2. (Gram.) Compound word;
  • ஒட்டுக்கடுக்கன். காதிலே யொட்டிட்டு (தனிப்பா.). 3. A kind of small earring;
  • ஒட்டுத்திண்ணை. (யாழ். அக.) 4. A masonry projection along the front of a house;
  • ஒளிப்பிடம். (யாழ். அக.) Hiding place;
  • நற்சமயம். (W.) 16. Favourable opportunity;
  • வேறுவகை மரக்கிளையுடன் ஒட்டவைத்துண்டாக்கிய செடி. இந்தச்செடி ஒட்டு. 15. Graft;
  • ஓரம். அந்தக் குழந்தை ஒட்டிலே இருக்குறது. 9. Border, edge;
  • ஒப்பு. ஒட்டுரைத்திவ் வுலகுன்னைப் புகழ்வெல்லாம் (திவ். திருவாய். 3, 1, 2). 8.. Comparison, resemblance;
  • இகலாட்டம். (W.) 7. Rivalry, emulation;
  • ஆணை. ஒட்டுவைத்தேனும்மேல்வாரீர் (அருட்பா, vi, வர்க்கமாலை, 89). 6. [T. oṭṭu.] Oath;
  • சார்பு. ஒட்டறப்பொருட்பறிப்பவர்க்கு (திருப்பு. 615). 5. Connection, attachment, love, affection;
  • அற்பம். (சூடா.) 4. Smallness, narrowness;
  • சினேகம். அவனுக்கும் இவனுக்கும் ஒட்டு அதிகம். 3. Union, friendship;
  • புட்படுக்குங் கருவி. ஒட்டில்பட்டக்குருகு (திருப்பு. 1163). 2. Bird-lime;
  • இணைக்கப்பட்டது. 1. Patch; piece stuck or fastened on, whether of cloth, board or metal;
  • . 14. Species of Loranthus. See புல்லுருவி. (மலை.)
  • . 13. See ஒட்டணி. (குறள், 475, உரை.)
  • மரப்பட்டை. ஒட்டுவிட் டுலறிய பராரை (கல்லா. 6, 25). 12. Bark of a tree;
  • கதிர்கொய்த தாள். (J.) 10. Stubble;
  • விலைகூட்டுகை. (W.) 17. Raising the bid, as at an auction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) firework, bomb which when fired into the air, bursts into shining sparks, ஒ?ட்டுவிட, to shoot off a fire-work; 2. to start false rumours.
  • s. a game of cards played by two persons.
  • s. & v. n. patch; 2. union, friendship; 3. smallness, narrowness; 4. emulation, rivalry, இகலாட்டம்; 5. bark of a tree; 6. graft; 7. favourable opportunity, நற்சமயம்; 8. raising the bid, as in auction, விலைகூட்டுதல்; 9. border, edge, ஓரம்; 1. attachment, affection, love அபிமானம், பிரியம்; 11. division, vow, சபதம். ஒட்டுக்காய்ச்சல், a low lingering fever, contagious fever. ஒட்டுக்குஞ்சு, a small white louse; a very young bird. ஒட்டுக்குடி, a family or person dwelling with another is the same house. ஒட்டுக்கேட்க, (ஒற்றுக்கேட்க) to eavesdrop, to overhear. ஒட்டுத் திண்ணை, a narrow pyal. ஒட்டுத்தையல், mending, patching. ஒட்டு நிற்க, to lurk, to overhear. ஒட்டுப்பற்று, ஒட்டுரிமை, distant relationship. ஒட்டுப்பற்றில்லாமல் போயிற்று, all friendship or relationship has ceased. ஒட்டுப்பார்க்க, to observe slyly; to peep, to overhear. ஒட்டுப்புல், a grass full of little clots. ஒட்டுப்போட, to patch up, to stick on. ஒட்டுமா, grafted mango. ஒட்டுவிட்டுப் போக, to become disjoined or disjointed. ஓரொட்டு, adv. altogether, by the lump, on an average. ஓரொட்டுக்கு வாங்க, to buy commodities by wholesale.
  • III. v. t. stick on, glue up, cause to cleave, பொருத்து; 2. resort, apply for protection, சாரு; 3. permit, allow, let, இடங்கொடு; 4. create, make, படை; 5. advance towards, approach, கிட்டு; 6. make friends with, நட்பாகு; 7. enhance, raise, as the sale price of an article; கூட்டு; v. i. cleave or cling together, பொருந்து; 2. grow lean, be shrunk, வற்று, சுருங்கு; 3. lurk, overhear, waylay, ஒட்டி நில்; 4. be suitable or appropriate, தகுதியா யிரு, பொருந்து. ஒட்டுநர், ஒட்டினர்; friends ( x ஒட்டார், ஒட்டலர், enemies). அவன் வரட்டும், (prop. அவன் வரவொட் டும்) let him come. என்னை வரஒட்டான், he gives me no permission to come. அதை விழ ஒட்டாதே, don't let it fall. இது உனக்கு ஒட்டுமோ, will this (unjust gain) abide with you? மரத்தோடு ஒட்ட, to lurk behind a tree. ஒருவனை ஒட்டிப்பிழைக்க, to subsist by means of another. ஒட்டக் கட்ட, to tie short or close. ஒட்டிக்கொள்ள, to cleave together; to adhere by injection, to infect. ஒட்டிய புண், venereal disease, the pox. ஒட்டிய மேளம், a kind of drum. ஒட்டுச் சல்லடம், short trousers. ஒட்டுடந்தை, slight participation in an act. ஒட்டுத்தரவு, a circular. ஒட்டுவாரொட்டி, a contagious disease. ஒட்டுவிக்க, ஒட்டிவைக்க, to join or link together. ஒட்டுறவு, close relationship.

வின்சுலோ
  • [oṭṭu] ''s.'' Patch, a piece stuck or fastened on, whether of cloth, board, or metals, இணைக்கப்பட்டது. 2. Birdlime or a noose connected with it, to ensnare birds, a snare, gin, &c., புட்படுக்குங்கண்ணி. 3. A small earring, sticking close to the ear, also called ஒட்டுக்கடுக்கன். 4. A narrow outer verandah, ஒட்டுத்திண்ணை. 5. The di visions of an army, battle array, படைவ குப்பு. 6. A favorable opportunity for se curing some advantage in an affair, நற்சம யம். 7. Wager, stake, agreement, vow, சபதம். 8. Rivalry, emulation, இகலாட்டம். 9. Allegory--as when it is said the axle tree of a cart will break though loaded with peacock's feathers, if the quantity be sufficiently great; i. e. a great hero will be subdued by weaker persons if the number be great, ஓரலங்காரம். 1. Success, வாய்ப்பு. 11. ''[prov.]'' Stubble, தாளடி. ஒட்டிலேபட்டசிறுபட்சிபோலாகவேயுழல்கின்ற பேதைமனமே. Oh! my inconsiderate mind struggling for relief as a little bird en tangled in a net. (சச்சி.)
  • [oṭṭu] கிறேன், ஒட்டினேன், வேன், ஒட்ட, ''v. a. and v. n.'' To stick on, to stick up, to glue on, cause to cleave or adhere, பொருத்த. 2. To apply, resort, betake one's self to a person for support, protection, to come or be near, or in contact with, to lean on or join one's self to a thing, சார. 3. To use qualifying terms, phrases, ad juncts, &c., அடைகொடுக்க. 4. To lay a wager, to gamble, பந்தயம்வைக்க. 5. To per mit, suffer, allow, let, இடங்கொடுக்க. 6. To increase length or breath by addition, to add to, சேர்க்க. 7. To grow lean, be wither ed, shrunk, &c., to have the skin stick to the bones, be shrivelled as a fruit, &c., சுருங்க. 8. To stand near a wall, a pillar, &c., in order to over-hear, to way-lay, &c., விசேஷங்கேட்கவொளித்துநிற்க. சுட்டமண்ணும்பச்சைமண்ணுமொட்டாது. Burnt earth will not adhere to that which is fresh. ஒட்டி யுலர்வாருறவு. That is friendship which adheres to and suffers with one, ''lit.'' which dries with one as the flowers in the tank. இதுனக்கொட்டுமோ. Will this unjust gain, &c., abide with you? உலகத்தோடொட்டவொழுகல். Acting con formably to the world. (குறள்.) மரத்தோடொட்ட. To hide one's self be hind a tree. தோலெல்லாமெலும்போடொட்டிப்போயிற்று..... The skin cleaves to the bones. ஒருவனையொட்டிப்பிழைக்க. To subsist by means of another. அவனைவரவொட்டும். [''Contracted in collo quial use to'' அவன்வரட்டும்.] Let him come. சொல்லவொட்டான். He will not permit me to speak.
  • ''v. noun.'' Adhesion, contact, attachment, conjunction, friendship, cement, சேர்க்கை. 2. Being close to a wall, tree, &c., generally for some bad purpose, lurking to over-hear, to en snare birds, &c., பதிவிருக்கை. 3. Bidding more--as at a sale, விலையுயர்த்திக்கேட்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒட்டு-. [K. M. Tu. oṭṭu.]1. Patch; piece stuck or fastened on, whetherof cloth, board or metal; இணைக்கப்பட்டது. 2.Bird-lime; புட்படுக்குங் கருவி. ஒட்டில்பட்டக்குருகு(திருப்பு. 1163). 3. Union, friendship; சினேகம். அவனுக்கும் இவனுக்கும் ஒட்டு அதிகம். 4.Smallness, narrowness; அற்பம். (சூடா.) 5.Connection, attachment, love, affection; சார்பு.ஒட்டறப்பொருட்பறிப்பவர்க்கு (திருப்பு. 615). 6.[T. oṭṭu.] Oath; ஆணை. ஒட்டுவைத்தேனும்மேல்வாரீர் (அருட்பா, vi, வர்க்கமாலை, 89). 7. Rivalry,emulation; இகலாட்டம். (W.) 8. Comparison,resemblance; ஒப்பு. ஒட்டுரைத்திவ் வுலகுன்னைப்புகழ்வெல்லாம் (திவ். திருவாய். 3, 1, 2). 9. Border,edge; ஒரம். அந்தக் குழந்தை ஒட்டிலே இருக்கிறது.10. Stubble; கதிர்கொய்த தாள். (J.) 11. Division of an army, battle array; படைவகுப்பு.(திவா.) 12. Bark of a tree; மரப்பட்டை. ஒட்டுவிட் டுலறிய பராரை (கல்லா. 6, 25). 13. Seeஒட்டணி. (குறள், 475, உரை.) 14. Species ofLoranthus. See புல்லுருவி. (மலை.) 15. Graft;வேறுவகை மரக்கிளையுடன் ஒட்டவைத்துண்டாக்கியசெடி. இந்தச்செடி ஒட்டு. 16. Favourable opportunity; நற்சமயம். (W.) 17. Raising the bid,as at an auction; விலைகூட்டுகை. (W.)
  • n. < ஒட்டு-. 1. Tax; வரி.வேறு ஒட்டுக்கொண்டு வருகிற நிலத்துத் தரம்பெற்றநிலம் (S. I. I. viii, 23). 2. (Gram.) Compoundword; தொகைநிலைச்சொல். அறுவகை ஒட்டு வகுத்து (தொல். சொல். 1, இளம்பூ.). 3. A kind ofsmall earring; ஒட்டுக்கடுக்கன். காதிலே யொட்டிட்டு. (தனிப்பா.). 4. A masonry projectionalong the front of a house; ஒட்டுத்திண்ணை.(யாழ். அக.)
  • n. cf. ஒற்று. Hiding place;ஒளிப்பிடம். (யாழ். அக.)