தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழும்பல் ; கிளர்ச்சி ; தோன்றுதல் ; புறப்படுதல் ; உதித்தல் ; மேற்பட்டு வருதல் ; துயரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புறப்படுகை. சோதனைபுரிவாரிற் றுண்ணென வெழலுற்றான் (கந்தபு. தவங்கா. 1). 2. Starting, departing;
  • துக்கம். (யாழ். அக.) Grief;
  • கிளர்ச்சி. அமரை வேட்டுவந் தெழலுறு மனத்தினர் (கம்பரா. கரன்வ. 43). 1. Enthusiasm, elation;
  • உதிக்கை. அங்கதிலையை வந்தெழலும் (கந்தபு. திருநகர. 72.) 3. Originating, emanating;

வின்சுலோ
  • --எழுகை, ''v. noun.'' Rising, ascent, எழுச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எழு-. 1. Enthusiasm,elation; கிளர்ச்சி. அமரை வேட்டுவந் தெழலுறு மனத்தினர் (கம்பரா. கரன்வ. 43). 2. Starting, departing;புறப்படுகை. சோதனைபுரிவாரிற் றுண்ணென வெழலுற்றான் (கந்தபு. தவங்கா. 1). 3. Originating, emanating; உதிக்கை. அங்கதிலையை வந்தெழலும் (கந்தபு.திருநகர. 72).
  • n. Grief; துக்கம். (யாழ். அக.)