- 4 v. intr. [T. eriyu, K. uri,M. Tu. eri.] 1. To flame, ignite; சுவாலித்தல்.எரியுந்தீயோடு (திவ். திருவாய். 3, 6, 5). 2. To glow,shine, emit light; பிரகாசித்தல். எரியுஞ் செம்பொன்மணிமுடி (சூளா. மந்தி. 6). 3. To burn, as a sore,as fever; to smart; to suffer pain; to feel pangs,as the stomach from hunger; எரிச்ச லுண்டாதல்.கண்ணெரிகின்றது. 4. To be envious, jealous;பொறாமைகொள்ளுதல். 5. To experience a painful emotion; துயரமடைதல். அதைப்பார்க்கும்போது மனம்எரிகிறது. 6. To be angry, indignant;கோபங்கொள்ளுதல். 7. To become old; முதிர்தல். எரிகின்ற மூப்பினாலும் (கம்பரா. மருத்து. 17).
|