தமிழ் - தமிழ் அகரமுதலி
  வடிவழகு ; தெய்வத் திருமேனி ; நிறம் ; அச்சம் ; அட்டை ; பலமுறை சொல்லுகை ; பருமை ; தோணி ; உடல் ; எலுமிச்சை ; இசைப்பாடல் ; நோய் ; உருவமுள்ளது ; உளியாற் செய்த சிற்ப வேலை ; தாலி முதலியவற்றில் கோக்கும் உரு ; தன்மை ; அகலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • தன்மை. (ஈடு 1, 5, 3, ஜீ. பக். 232.) Nature;
 • உளியாற்செய்த சித்திரவேலை. சிற்றுளிகள் சென்று செத்தின உருக்க ளழுந்தின . . . குறடு (சிறுபாண். 252, உரை). 7. Decorative work in wood carved with the chisel;
 • மான். கானிடை யுருவைச் சுடுசரந் துரந்து (திவ். பெரியதி. 1, 4, 2). Deer;
 • அகலம். (நாநார்த்த.) Largeness; width;
 • கரு. (W.) 12. Embryo;
 • தாலி முதலியவற்றிற் கோக்கும் உரு. தாலியுரு. Colloq. 11. Gold bead or other ornament strung on either side of the marriage badge;
 • தோணி. ஐந்து உரு வருகிறது. Colloq. 10. Schooner, sloop, small vessel;
 • இசைப்பாட்டு. தாளத்தின் வழியுரு வெடுத்து (உத்தரரா. சீதைவ. 25). 9. Music, song, musical composition;
 • பலமுறை செய்யும் அனுசந்தானம். உருவெண்ணு மந்தியால் (திவ். இயற். 1, 33). 8. Repetition of a prayer, an incantation or a lesson;
 • அச்சம். உருவுட்காகும் (தொல். சொல். 302). 1. Fear,
 • அட்டை. (பிங்.) 2. Leech;
 • வடிவு. அற்றே தவத்திற் குரு (குறள், 261). 1. Form, shape, figure;
 • வடிவழகு. உருவுடைக் கன்னியரைப் போல (நாலடி, 274). 2. Beauty of form, loveliness, attractiveness;
 • உடல். உருவினி னிறைந்து நின்று (சி. சி. 4, 17) 3. Body;
 • விக்கிரகம். தேவதார்ச்சனை தாம் பண்ணல்போ லுருப்பல பரப்பி (பிரபோத. 11, 12). 4. Idol;
 • நிறம். பல்வே றுருவின் வனப்பமைகோதை (குறிஞ்சிப். 103). 5. Colour;
 • உருவமுள்ளது. உருவுயி ரென்னின் (சி. சி. 4, 9). 6. That which appears in outline;
 • எலுமிச்சை. (சித். அக.) Lime tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. (cf. உருவு, உருபு, உரூபம், உருவம்) form, shape, appearance, வடிவு; 2. (coll.) ship, கப்பல்; 3. an article, piece, உருப்படி; 4. repetition of a prayer, an incantation or a lesson; 5. (coll.) gold bead strung on either side of the marriage badge; 6. idol விக்கி ரகம்; 7. embryo, கரு. எத்தனை உரு, how many articles or ships are there? உரு எடுக்க, to assume a form, to incarnate. உருநாட்டு, an idol. உருப்பட, to be formed shaped, to prosper. உருப்படி, pieces, articles, each individual, each particular. ஆயிரம் உருப்படி, one thousand pieces. உருப்படியாய், adv. soundly unhurt, without any injury - ஆள் உருப்படி யாய் வந்து சேர்ந்தான். உருப்போட, to repeat a mantram or a lesson by heart. உருமாற, to be transformed. உருவழிந்துபோக, -க்குலைய, to be emaciated, to be disfigured, to be out of order. உருவாக, -த்தரிக்க, to be shaped, formed, conceived, generated. உருவாக்க, -ப்படுத்த, to form or shape. உருவிலி, Manmatha who has no shape; 2. a visionary object. உருவேற்படுத்த, to form, to fashion. உருவொளி, reflection.
 • s. fear, அச்சம்; 2. leech, அட்டை; 3. anger.
 • VI. v. i. get angry, கோபி, exhibit signs of anger; 2. burn or smart, அழலு; 3. become ripe, mature, முதிரு; v. t. resemble, ஒத்திரு; 2. be angry with, கோபி.
 • VI. v. i. appear, come into existence, தோன்று; 2. sprout, shoot, முளை; 3. issue forth, well, as a spring சுர.
 • VI. v. i. appear, come into existence, தோன்று; 2. sprout, shoot, முளை; 3. issue forth, well, as a spring சுர.
 • VI. v. i. appear, come into existence, தோன்று; 2. sprout, shoot, முளை; 3. issue forth, well, as a spring சுர.
 • VI. v. i. appear, come into existence, தோன்று; 2. sprout, shoot, முளை; 3. issue forth, well, as a spring சுர.

வின்சுலோ
 • [uru] ''s.'' Form, appearance, shape, figure, fashion, வடிவு. 2. Beauty, அழகு. 3. Body, உடல். 4. Appearance, an in distinct object, தோற்றம். 5. Image, idol, statue, விக்கிரகம். 6. A vessel, a dhoney, a ship, &c., கப்பல். 7. An article, a piece, different things counted, உருப்படி. 8. A course of recitation of prayers, incanta tions, &c., செபத்தினுரு. 9. Divinity, divine influence, power, grace, &c. brought in to a person or idol by the repetition of incantations, சன்னதம். (தீ. 297.) 1. Big ness, பருமை. 11. ''(p.)'' Color, நிறம். 12. A leech, அட்டை. 13. Inner part, interior, centre, உள். 14. (சது.) Disease, வியாதி. 15. Anger, signs of anger, கோபம். 16. Heat, வெப்பம். 17. The embryo, கரு. ஐந்துருவருகிறது. Five vessels are coming. தூரத்திற்காண்கிறவுருவென்ன? What is that form or object seen in the distance?
 • [uru] ''adj.'' Much, excessive, அதிக மான. 2. Large, great, பெரிய. 3. Long, நீண்ட. 4. Valuable, precious, விலையுயர்ந்த. Wils. p. 163. URU.
 • [uru] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To be angry, be provoked, be fierce, to rage, கோபிக்க. 2. To exhibit signs of anger, சினக்குறிப்புக்காட்ட. 3. To be abundant, copious, மிக. 4. To be intense, அதிகரிக்க. 5. To be great, பெரிதாக. 6. To sprout, shoot, முளைக்க. 7. To have an origin, come into existence, to be evolved, வெளிப்பட. 8. To appear, assume form, தோற்ற. 9. To result in effects--as the deeds of former births, to grow mature, கன் மம்விளைய. ''(p.)'' நல்லறமேயுருத்தெழுந்திடுமௌவைநந்தாய். Oh! venerated mother, virtue personified. வெவ்வினையுருத்தகாலை. When the vile deeds (the fruits of them) appeared. (சிலப்பதி காரம்.) ஊழ்வினையுருத்தென. As soon as the deeds connected with former births had become matured. (சிலப்பதி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < உரு-. 1. Fear; அச்சம்.உருவுட்காகும் (தொல். சொல். 302). 2. Leech;அட்டை. (பிங்.)
 • n. < rūpa. [M. uru.] 1. Form,shape, figure; வடிவு. அற்றே தவத்திற் குரு (குறள்,261). 2. Beauty of form, loveliness, attractiveness; வடிவழகு. உருவுடைக் கன்னியரைப் போல (நாலடி, 274). 3. Body; உடல். உருவினி னிறைந்து நின்று(சி. சி. 4, 17). 4. Idol; விக்கிரகம். தேவதார்ச்சனைதாம் பண்ணல்போ லுருப்பல பரப்பி (பிரபோத. 11, 12).5. Colour; நிறம். பல்வே றுருவின் வனப்பமைகோதை (குறிஞ்சிப். 103). 6. That which appears inoutline; உருவமுள்ளது. உருவுயி ரென்னின் (சி. சி.4, 9). 7. Decorative work in wood carvedwith the chisel; உளியாற்செய்த சித்திரவேலை. சிற்றுளிகள் சென்று செத்தின உருக்க ளழுந்தின . . .குறடு (சிறுபாண். 252, உரை). 8. Repetition of aprayer, an incantation or a lesson; பலமுறைசெய்யும் அனுசந்தானம். உருவெண்ணு மந்தியால் (திவ்.இயற். 1, 33). 9. Music, song, musical composition; இசைப்பாட்டு. தாளத்தின் வழியுரு வெடுத்து(உத்தரரா. சீதைவ. 25). 10. Schooner, sloop,small vessel; தோணி. ஐந்து உரு வருகிறது. Colloq.11. Gold bead or other ornament strung oneither side of the marriage badge; தாலிமுதலியவற்றிற் கோக்கும் உரு. தாலியுரு. Colloq. 12. Embryo; கரு. (W.)
 • n. < ruru. Deer; மான். கானிடையுருவைச் சுடுசரந் துரந்து (திவ். பெரியதி. 1, 4, 2).
 • n. Lime tree; எலுமிச்சை. (சித்.அக.)
 • n. < rūpa. Nature; தன்மை.(ஈடு, 1, 5, 3, ஜீ. பக். 232.)
 • n. < uru. Largeness; width;அகலம். (நாநார்த்த.)