உரம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமை ; திண்மை ; திடம் ; மரவயிரம் ; எரு ; மார்பு ; அறிவு ; ஊக்கம் ; படைவகுப்பின் முன்னணி ; குழந்தைகளுக்கு விழும் சுளுக்கு வகை ; மதில் ; உள்ளத்தின் மிகுதித் தன்மை ; விரைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எரு. நிலத்துக்கு உரம்போடவேணும். 5. Manure, fertilizer, as strengthening the soil;
  • மார்பு. வாளிவந் துரங்குடைந்து (கம்பரா. மாரீச. 93). 1. Chest, breast, bosom;
  • ஞானம். (பிங்.) 2. Winsdom, spiritual knowledge, clearness of understanding;
  • ஊக்கம். (பிங்.) 3. Energy, zeal, spirit;
  • வியூகத்தின்முன்னணி. (குறள், 767, உரை.) 4. Van of an army;
  • குழந்தைகட்கு விழுஞ் சுளுக்குவகை. உரம் எடுக்கவேண்டும். 5. Infantile sprain;
  • வைரம். (W.) 4. Solid part of timber, heart of a tree;
  • திடம். ஓட்டைமனவ னுரமிலி யென்மரும் (பரிபா. 12, 51). 3. Resolution, fortitude, firmness of mind, strength of will;
  • மதில். (பிங்.) Rampart;
  • வலிமை. (திவா.) 1. Strength;
  • திண்மை. 2. Hardness, compactness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. chest, breast, bosom, மார்பு; 2. wisdom, spiritual knowledge, ஞானம்; 3. van of an army, படை முன்னணி; 4. infantile sprain. உரகம், உரங்கம், உரகதம், உரங்கமம், a snake which moves on its breast. உரகன், Adisesha, ஆதிசேடன், (also உரகாதிபன், உரகேந்திரன்). உரகாரி, Garuda. the destroyer of snakes. உரகர், the Nagas, a class of demigods, நாகர்.
  • s. strength, firmness, hardness, force of voice, வலி; 2. resolution, firmness of mind, மனோவலி, திடம்; 3. manure, எரு; உரமாய்ப்பெய்கிறது, it rains hard. கடல் உரமாயிருக்கிறது, the sea is rough. காற்றுரமாய் அடிக்கிறது, the wind blows hard. உரக்கடல், boisterous sea. உரங்கொள்ள, to grow strong, to be strengthened or hardened. உரங்சொல்ல, -உண்டாக்க, to embolden; to encourage. உரமண், hard ungenial soil. உரமான சத்தம், a loud noise. உரம்போட, to manure. உரல், s. a large mortar to beat paddy, rice etc. உரலாணி, a pestle; 2. a kind of block set into the mortar, when it is worn away. உரலிடித்தல், pounding in a mortar. உரற் கட்டை, a mortar formed of a block of wood; 2. metaph. a stout short man. உரற்குழி, a hole in which the mortar is steadied. கல்லுரல், a stone mortar. "விரலைத்தொட்டுக்கொண்டு உரலை விழுங் குகிறது.", "To strain at a gnat and swallow a camel" - Proverb.

வின்சுலோ
  • [urm] ''s.'' Strength, firmness, hard ness, compactness, coarseness, aspiration, force of voice, expression, meaning, &c., வலி. 2. Energy, spirit, exertion, deter mination, resolution, fortitude, firmness of mind, ஊக்கம். 3. ''(p.)'' The breast, chest, மார்பு. 4. Wisdom, knowledge, spiritual knowledge, ஞானம். 5. Velocity, force, missile or projectile force, வேகம். 6. The solid part of timber, வயிரம். 7. Hardness, induration, obduracy, திண்மை. 8. A sur rounding wall, மதில். கடலுரமாயிருக்கிறது. The sea is high, rough. காற்றுரமாயிருக்கிறது. The wind is high, boisterous.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. உர-. [M. uram.] 1.Strength; வலிமை. (திவா.) 2. Hardness, compactness; திண்மை. 3. Resolution, fortitude,firmness of mind, strength of will; திடம். ஒட்டைமனவ னுரமிலி யென்மரும் (பரிபா. 12, 51). 4.Solid part of timber, heart of a tree; வைரம் (W.)5. Manure, fertilizer, as strengthening the soil;எரு. நிலத்துக்கு உரம்போடவேணும்.
  • n. < uras. 1. Chest, breast,bosom; மார்பு. வாளிவந் துரங்குடைந்து (கம்பரா.மாரீச. 93). 2. Wisdom, spiritual knowledge,clearness of understanding; ஞானம். (பிங்.) 3.Energy, zeal, spirit; ஊக்கம். (பிங்.) 4. Vanof an army; வியூகத்தின்முன்னணி. (குறள், 767,உரை.) 5. Infantile sprain; குழந்தைகட்கு விழுஞ்சுளுக்குவகை. உரம் எடுக்கவேண்டும்.
  • n. prob. உர-. Rampart; மதில்.(பிங்.)