தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்வாகிய சாதி ; மேற்குலம் ; உயர்ந்த குலம் ; மானிடர் ; தேவர் ; நரகர் ; ஆகியோரைக் குறிக்கும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மக்கள் தேவர் நரகரென்னு முத்திறத்தாரைக் குறிக்குஞ்சொல். (நன். 261.) 2. (Gram.) Nouns denoting personal class of beings, including men, gods and demons, opp. to அஃறிணை;
  • மேற்குலம். உயர்திணை யூமன்போல (குறுந். 224). 1. High caste, noble family;

வின்சுலோ
  • ''s. [in grammar.]'' The superior or rational class. See திணை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உயர்- +. 1.High caste, noble family; மேற்குலம். உயர்திணையூமன்போல (குறுந். 224). 2. (Gram.) Nouns denoting personal class of beings, including men,gods and demons, opp. to அஃறிணை; மக்கள் தேவர் நரகரென்னுமுத்திறத்தாரைக் குறிக்குஞ்சொல். (நன்261.)