தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடமை ; வேதனை ; வாதை ; நோய் ; இடையூறு ; வருத்தம் ; தடை ; பாதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவச்சேதகம் நான்கனுளொன்று. (விசாரசந் 320.) One of four ava-c-cētakam, q.v.,
  • வியாதி. பேருணவு உபாதியை யுண்டாக்கும். 2. Disease, ailment;
  • இடையூறு. உம்பரால் வரு முபாதி காப்பன் (மச்சபு. பிருகுவி. 49). 3. Hindrance, obstruction;
  • கடமை, எப்பேர்ப்பட்ட உபாதிகளும் இழித்து விட்ட அளவுக்கு (S.I.I. ii, 118). 1. Dues;
  • சாத்தியத்திலே வியாபித்துச் சாதனத்தில் வியாபகமில்லாதது. (தர்க்கபா. 18.) 2. (Log.) Special cause of a general effect;
  • மாயையா லுண்டாகுந் தோற்றம். இந்திரியவுபாதியால் (பிரபோத. 39, 30). 3. Appearance, phantom;
  • வேதனை. உச்சியிற் சாலவுபாதி பசிதாகமாகும் (பட்டினத். திருப்பா. திருத்தில்லை. 8). 1. Torment, agony, pang;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உபாதை, s. severe pain, tor- ment, affliction, வாதை; 2. disease, வியாதி; 3. difficulty, வருத்தம்; 4. dues, கடமை; 5. phantom, மாயைத் தோற்றம்.
  • VI. v. t. cause distress; afflict, torment, torture, உபத்திரவம் செய்.

வின்சுலோ
  • [upāti] ''s.'' Severe pain, torment, agony, distressing rage of the passions, வாதை. 2. Disease, ailment, வியாதி. 3. ''(fig.)'' Difficulty, obstruction, வருத்தம்.
  • [upāti] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To cause distress, to afflict, tor ment, torture, plague, உபத்திரவஞ்செய்ய.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upā-dhi. 1. Dues;கடமை. எப்பேர்ப்பட்ட உபாதிகளும் இழித்து விட்டஅளவுக்கு (S.I.I. ii, 118). 2. (Log.) Special causeof a general effect; சாத்தியத்திலே வியாபித்துச் சாதனத்தில் வியாபகமில்லாதது. (தர்க்கபா. 18.) 3. Appearance, phantom; மாயையா லுண்டாகுந் தோற்றம். இந்திரியவுபாதியால் (பிரபோத. 39, 30).
  • n. cf. bādhā. 1. Torment,agony, pang; வேதனை. உச்சியிற் சாலவுபாதி பசிதாகமாகும் (பட்டினத். திருப்பா. திருத்தில்லை. 8). 2. Disease, ailment; வியாதி. பேருணவு உபாதியை யுண்டாக்கும். 3. Hindrance, obstruction; இடையூறு.உம்பரால் வரு முபாதி காப்பன் (மச்சபு. பிருகுவி. 49).
  • n. < upādhi. (Log.) One offour ava-c-cētakam, q.v.; அவச்சேதகம் நான்கனுளொன்று. (விசாரசந். 320.)