தமிழ் - தமிழ் அகரமுதலி
  கோரைக்கிழங்கு ; துகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • துகள். உடைந்தன வுதிராகி (கந்தபு. சதமக். 13). 1. Crumb, piece, fragment;
 • முத்தக்காசு. (W.) 2. Straight-sedge tuber;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • உதிரு, II. v. i. fall off, drop down. சொரி; 2. crumble, பிதிரு; 3. die, சா; 4. demolished, குலைந்துபோ. மரம் மாவாய் உதிர்கிறது, the wood crumbles into dust. நீ சீக்கிரம் உதிர்ந்துபோவாய், you shall die soon (a curse). உதிரி, what falls down or separated, உதிர்ந்தது; 2. a kind of small-pox; 3. a confectionery made of flour, பிட்டு. உதிர்ந்த சருகு, withered leaves which have dropped down. உதிர்வு, உதிர்தல், v. ns. இலையுதிர்காலம், the season of the fall of leaves, autumn.
 • VI. v. t. (caus. of உதிர்) shake off, drop, உகு; 2. shed tears, கண்ணீர் சிந்து; 3. cause to drop or fall, சொரிவி; 4. break to pieces, பொடியாக்கு. உதிர்த்தல், உதிர்ப்பு, v. ns. shedding.
 • s. crumb, piece, fragment, துகள்; 2. straight-sedge tuber, முத்தக்காசு, (the root of the cyperus juncifol.)

வின்சுலோ
 • [utir] ''s.'' The root of the Cyperus juncifol, முத்தக்காசு.
 • [utir ] --உதிரு, கிறது, உதிர்ந்தது, உ திரும், உதிர, ''v. n.'' To drop off, fall off--as leaves, fruits, &c.; to be blasted, nipped, to fall off--as the hair, by disease or age, சொரிய. 2. To be shaken with the wind or otherwise, அசைக்கப்பட்டுதிர. 3. To crumble, fall to pieces as cakes (பிட்டு), பிதிர. 4. To fall as tears, சிந்த. 5. To die (used in im precations), சாவ. நீசீக்கிரமுதிர்ந்துபோவாய். You shall die soon (a curse). தாரகையுதிர்ந்த. The stars fell. (ஸ்காந்தம்.) பூவுதிரப்பிஞ்சுதிரக்காயுதிரக்கனியுதிர. Let blos soms, buds, unripe fruits, and fruits drop off; i. e. let people of all ages die--an im precation.
 • ''s.'' Powder, dust, any thing crumbled, பொடி.
 • [utir] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To shed, cast leaves, fruits, &c.- as trees; to cause to drop or fall in numbers or succession, to shake off, beat off, peel off, blast, nip, உகுக்க. 2. To break to pieces, பொடியாக்க. 3. ''(p.)'' To shed tears, கண்ணீருகுக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < உதிர்-. 1. Crumb, piece,fragment; துகள். உடைந்தன வுதிராகி (கந்தபு. சதமக.13). 2. Straight-sedge tuber; முத்தக்காசு. (W.)