தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசையுறல் ; விரும்புதல் ; மறத்தல் ; மிகுதல் ; உலாவுதல் ; கைவிடாதிருத்தல் ; வேண்டும்வழிப் பொருள் கொடாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறத்தல்.(பிங்.) உலோபஞ்செய்தல். (குறள், 432.) மிகுதல். இன்பத் திவறினார் காம வெள்ளத்து (சீவக. 966). உலாவுதல். இவறுதிரை திளைக்கு மிடுமணல் (ஐங்குறு. 177). 2. To forget; -intr. 1. To be niggardly; 2. To heighten, enhance, as pleasure; 3. To roll, as billows, to and fro;
  • விரும்புதல். ஈட்டமிவறி யிசைவேண்டா வாடர் (குறள், 1003). 1. To desire earnestly, wish for;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To desireearnestly, wish for; விரும்புதல். ஈட்டமிவறியிசைவேண்டா வாடவர் (குறள், 1003). 2. To forget; மறத்தல். (பிங்.)--intr. 1. To be niggardly;உலோபஞ்செய்தல். (குறள், 432.) 2. To heighten,enhance, as pleasure; மிகுதல். இன்பத் திவறினார்காம வெள்ளத்து (சீவக. 966). 3. To roll, as billows, to and fro; உலாவுதல். இவறுதிரை திளைக்குமிடுமணல் (ஐங்குறு. 177).