தமிழ் - தமிழ் அகரமுதலி
    ' இரண்டு ' என்னும் எண் ; சில ; உகர எழுத்து ; மலசலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலசலம். இரண்டடக்கார் (திருவேங். சத. 74.) 4. Excrement and urine;
  • உ என்னும் எண். 1. Two;
  • சில. இரண்டுநாளைச் சுற்றமே யிரங்கல் வேண்டா (சீவக. 270). 2. A few;
  • உகர வெழுத்து. எட்டினோ டிரண்டும் மறியேனையே (திருவாச. 5, 49). 3. The letter உ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (ரண்டு coll.) s. & adj. two. As an adj. pref. it often becomes, இரு before consonants or ஈர் before vowels which see separately, (s.); a few, சில; 2. the letter உ; 3. excrement and urine, மலஜலம். இரண்டில் ஒன்று எடு, take either of the two. இரண்டாந்தரம், secondary kind or class; 2. the second time. இரண்டாம் பக்ஷமாயிருக்க, to be not the chief thing or aim; to be of a doubtful nature. இரண்டாம் பாட்டன், a great grandfather. இரண்டாவது, secondly; that which is the second. இரண்டுக்குப் போக, --இருக்க, to defecate, மலங்கழிக்க. இரண்டுக்கும் உண்டு, the issue is doubtful, the thing is critical. இரண்டுங்கெட்டவன், (-கெட்டான் coll.) an indifferent man neither good nor bad; one who cannot distinguish good from evil; one with illbalanced judgment; 2. a destitute, out-caste fellow. இரண்டு செய்ய, to disobey, to act against orders; 2. to act perfidiously. இரண்டு சொல்ல, to refuse, to give an evasive answer. இரண்டு நினைக்க, to be hypocritical; to meditate treachery under a shadow of honesty. இரண்டுபட, to disagree. to become disunited, to become divided in two. இவ்விரண்டு (இரவ்வெண்டு coll.), two by two; in twos.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இண்டை, ஈகை, ஈங்கை, ஈண்டு,புலிதொடக்கி.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • reNTu ரெண்டு two

வின்சுலோ
  • [irṇṭu] ''s. and adj.'' Two, இரண்டா மெண்.-As an adjective prefix, it often becomes இரு and ஈர், double, இரட்டிப்பான- as இருநிறம், two colors, a double color; ஈர லகு, two syllables. See அலகு. இரண்டிலொன்றுசொல்லு. Say either this or that. நாடிரண்டுபட்டது. The country is divided into two factions.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. reṇḍu, K. iraḍu,M. raṇḍu, Tu. raḍḍu.] 1. Two; 2 என்னும்எண். 2. A few; சில. இரண்டுநாளைச் சுற்றமே யிரங்கல் வேண்டா (சீவக. 270). 3. The letter உ; உகரவெழுத்து. எட்டினோ டிரண்டும் மறியேனையே (திருவாச. 5, 49). 4. Excrement and urine; மலசலம்.இரண்டடக்கார் (திருவேங். சத. 74).