தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்தல் ; நடத்துதல் ; சம்பாதித்தல் ; தோற்றுவித்தல் ; நூல் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்தல். இசையா தெனினு மியற்றியோ ராற்றால் (நாலடி. 194). 1. To do, make, perform, effect, execute;
  • நடத்துதல். நெஞ்சே யியற்றுவா யெம்மொடு (திவ். இயற். பெரியதிருவந். 1). 2. To cause to act, direct or control the movements of;
  • சம்பாதித்தல். ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க்கு (குறள், 760). 3. To acquire;
  • சிருஷ்டித்தல். கெடுகவுலகியற்றியான் (குறள், 1062). 4. To create;
  • நூல்செய்தல். சாத்தனார் இயற்றிய மணிமேகலை. 5. To compose; to write, as a book;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. caus. of இயல்-.1. To do, make, perform, effect, execute; செய்தல். இசையா தெனினு மியற்றியோ ராற்றால் (நாலடி.194). 2. To cause to act, direct or control themovements of; நடத்துதல். நெஞ்சே யியற்றுவா யெம்மொடு (திவ். இயற். பெரியதிருவந். 1). 3. To acquire;சம்பாதித்தல். ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க்கு(குறள், 760). 4. To create; சிருஷ்டித்தல். கெடுகவுலகியற்றியான் (குறள், 1062). 5. To compose;to write, as a book; நூல்செய்தல். சாத்தனார் இயற்றிய மணிமேகலை.