தமிழ் - தமிழ் அகரமுதலி
    சக்கரப்படை ; ஆணைச்சக்கரம் ; கட்டளை ; வட்டம் ; மோதிரம் ; சக்கரம் ; குயவன் திகிரி ; யானைக் கைந்நுனி ; கடல் ; கடற்கரை ; காண்க : ஆளி ; குன்றி ; கணவனைப் பிரிந்த மகளிர் இழைக்கும் கூடற்சுழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குன்றி. (பச். மூ.) Crab's eye'
  • (யாழ். அக.) Linseed plant. See ஆளி2.
  • கடற்கரை. பெருங்கடற் காழியனையன். (புறநா.330). 2. Seashore;
  • கடல். (பிங்). 1. Sea, as the deep;
  • யானைக்கைந் நுனி. (அக.நி.) 9. Tip of elephant's trunk;
  • கணவனைப் பிரிந்த மனைவி இழைக்குங் கூடற்சுழி. ஆழியாற் காணாமோ யாம் (ஐந்.ஐம்.43). 8. Curved line of loops drawn on sand by a woman to divine whether her husband will return in safety, the sum of which, if even, indicating the safe return and, if odd, failure to return;
  • குயவன் திகிரி. மட்கலத்தாழி யென்ன (கம்பரா.வாலிவ.37). 7. Potter's wheel;
  • சக்கரம். (பிங்). 6. Wheel, carriage wheel;
  • மோதிரம். ஆழிவாய் விரலில் (சீவக.833). 5. Ring;
  • சக்கராயுதம். ஆழியெழச் சங்கும் வில்லுமெழ (திவ்.திருவாய்.7, 4, 1). 1. Discus weapon;
  • ஆஞ்ஞாசக்கரம். ஆழிவேந்தன் (கம்பரா.தைல.70). 2. Royal power, as symbolised by the discus weapon;
  • கட்டளை. ஆழி நிற்குதி யல்லையேற் பழிவரும் (உபதேசகா.சிவவிரத.16). 3. Rule, command;
  • வட்டம். (பிங்). 4. Circle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the sea, கடல்; 2. a circle, வட்டம்; 3. ring, மோதிரம்; 4. wheel, சக்கிரம்; 5. a plant (linseed); 6. the sea-shore, the bank of a river or tank; 7. royal power. ஆழி விரல், the ring-finger. கணையாழி, seal-ring. காலாழி, a ring for the toe. திருவாழி, a royal seal-signet. ஆழிவித்து, a pearl.
  • VI. v. t. dig deep, ஆழமாய்த் தோண்டு. ஆழிக்க, to dig deep, ஆழித்தல், v. n. digging deep.

வின்சுலோ
  • [āẕi] ''s.'' A circle, வட்டம். 2. The discus weapon, சக்கரம். 3. A ring, மோதிரம். 4. A wheel, carriage-wheel, தேருருளை. 5. A car, carriage, வண்டி. 6. The sea, the great deep, கடல். 7. The sea-shore, bank of a river, tank, &c., கரைப்பொது. 8. The tip of an elephant's trunk, யானைக்கைநுனி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. அழி-. 1. Discus weapon;சக்கராயுதம். ஆழியெழச் சங்கும் வில்லுமெழ (திவ்.திருவாய். 7, 4, 1). 2. Royal power, as symbolised by the discus weapon; ஆஞ்ஞாசக்கரம்.ஆழிவேந்தன் (கம்பரா. தைல. 70). 3. Rule, command: கட்டளை. ஆழி நிற்குதி யல்லையேற் பழிவரும்(உபதேசகா. சிவவிரத். 16) 4. Circle; வட்டம்.(பிங்.) 5. Ring; மோதிரம். ஆழிவாய் விரலில்(சீவக. 833). 6. Wheel, carriage wheel; சக்கரம்.(பிங்.) 7. Potter's wheel; குயவன் திகிரி. மட்கலத்தாழி யென்ன (கம்பரா. வாலிவ. 37). 8. Curved lineof loops drawn on sand by a woman to divinewhether her husband will return in safety, thesum of which, if even, indicating the safe return and, if odd, failure to return; கணவனைப்பிரிந்த மனைவி இழைக்குங் கூடற்சுழி. ஆழியாற் காணாமோ யாம் (ஐந். ஐம். 43). 9. Tip of elephant'strunk; யானைக்கைந் நுனி. (அக. நி.)
  • n. < ஆழ்- +. 1. Sea, as thedeep; கடல். (பிங்.) 2. Seashore; கடற்கரை.பெருங்கடற் காழியனையன் (புறநா. 330).
  • n. Linseed plant. See ஆளி.(யாழ். அக.)
  • n. Crab's eye; குன்றி. (பச். மூ.)