தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாசு ; மனமாசு ; பொறாமை ; ஆணவ முதலிய பாசம் ; வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடை ; மலசலாதிகள் ; பிள்ளைப்பேற்றின் பின் வடியும் ஊனீர் ; ஆமைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆமைவகை. (W.) 8. Hawk's bill, Caretta squamata;
  • வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடை. 7. Soiled clothes;
  • பிரசவத்தின்பின் வடியும் ஊனீர். (இங்.வை.399). 6. Lochia, discharges after confinement;
  • பொறாமை. உள்ளத்தழுக் கறாமையால் (திருவிளை.நகரப்.100). 5. Envy;
  • மாசு. ஆடை அழுக்குப் பிடித்திருக்கிறது. 1. Dirt, stain;
  • மலசலாதிகள். இரண்டியக்க முதலான வழுக்காடை யெய்தின் (தணிகைப்பு.அகத்.392). 2. Excrement, physical impurities;
  • மனமாசு. (தணிகைப்பு.அகத்.213). 3. Impurity of mind;
  • ஆணவமுதலிய பாசம். அமலனுயிர்க் கழுக்கறுக்க (சிவதரு.பாயி.7). 4. Impurity of soul, as āṇava-malam;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dirt, filth, அசுத்தம்; 2. excrement, மலம்; 3. stain, moral defilement, மாசு; 4. envy, பொறாமை; 5. discharges after confinement. அவன் மனசில் அழுக்கிருக்கிறது, he has a bad conscience. அழுக்கான மனம், an envious mind. அழுக்குப்பட --அடைய, to grow dirty. அழுக்குப்படுத்த --ஆக்க, to make unclean. அழுக்கன், a miser, உலோபி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆமை, மாசு.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • aRukku அழுக்கு dirt, filth; dirty laundry

வின்சுலோ
  • [aẕukku] ''s.'' Filth, impurity, stain, taint, pollution, moral defilement, மாசு. 2. Envy, பொறாமை. 3. Excrement. மலம். 4. A tortoise, ஆமை, change of அழுங்கு. தலையழுக்காயிருக்கிறாள். She has an unclean head, i. e. she has her menses.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. அழுங்கு-. [M.aḻukku.] 1. Dirt, stain; மாசு. ஆடை அழுக்குப்பிடித்திருக்கிறது. 2. Excrement, physical impurities; மலசலாதிகள். இரண்டியக்க முதலானவழுக்காடை யெய்தின் (தணிகைப்பு. அகத். 392). 3.Impurity of mind; மனமாசு. (தணிகைப்பு. அகத்.213.) 4. Impurity of soul, as āṇava-malam;ஆணவமுதலிய பாசம். அமலனுயிர்க் கழுக்கறுக்க (சிவதரு. பாயி. 7). 5. Envy; பொறாமை. உள்ளத்தழுக்கறாமையால் (திருவிளை. நகரப். 100). 6. Lochia, discharges after confinement; பிரசவத்தின்பின் வடியும் ஊனீர். (இங். வை. 399.) 7. Soiled clothes;வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடை. 8. Hawk's bill,Caretta squamata; ஆமைவகை. (W.)