தமிழ் - தமிழ் அகரமுதலி
    துழாவுதல் ; கலத்தல் ; சூடுதல் ; தழுவுதல் ; கூடியிருத்தல் ; அனுபவித்தல் ; வயிறு வலித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூடியிருத்தல். ஆர்வமொடளைஇ (தொல். பொ. 146). To be mixed, mingled;
  • அனுபவித்தல். அளைவது காமம் (சீவக. 1551).; -v.intr. 4. To enjoy, experience;
  • தழுவுதல். என்னணியார் முலையாக மளைந்து (திருவாச. 49, 4). 3. To caress, put the hands or arms around;
  • கலத்தல். ஊனளைந்த வுடற் குயிராமென (கம்பரா. பள்ளி. 16). 2.To mingle with;
  • வயிறுவலித்தல். Loc. To suffer from gripes, as in dysentery;
  • சூடுதல். அனிச்சப்பூவை . . . மயிரில் அளைந்தாள் (குறள், 1118, மணக்.) - intr. To wear;
  • துழாவுதல். இன்னடிசில் புக்களையுந் தாமரைக்கை (நள. கலிதொ. 68). 1. To mix up, mingle, macerate, wallow;

வின்சுலோ
  • --அளைவு, ''v. noun.'' Mix ture.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. 1. To mix up,mingle, macerate, wallow; துழாவுதல். இன்னடிசில் புக்களைந் தாமரைக்கை (நள. கலிதொ. 68).2. To mingle with; கலத்தல். ஊனளைந்த வுடற்குயிராமென (கம்பரா. பள்ளி. 16). 3. To caress,put the hands or arms around; தழுவுதல்.என்னணியார் முலையாக மளைந்து (திருவாச. 49, 4).4. To enjoy, experience; அனுபவித்தல். அளைவது காமம் (சீவக. 1551).--v. intr. To be mixed,mingled; கூடியிருத்தல். ஆர்வமொடளைஇ (தொல்.பொ. 146).
  • 4 v. tr. To wear; சூடுதல். அனிச்சப்பூவை . . . மயிரில் அளைந்தாள்(குறள், 1118, மணக்.).--intr. To suffer fromgripes, as in dysentery; வயிறுவலித்தல். Loc.