அலசுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலைதல் ; சோர்தல் ; வெட்கும்படி பலபடப் பேசுதல் ; வருந்துதல் ; நீரில் கழுவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோர்தல். (சிலப்.16, 197. அரும்.) நீரிற் கழுவுதல். தோய்த்த வேஷ்டியை அலசு. வெட்கும்படி பலபடப் பேசுதல். அவனை நன்றாய் அலசிவிட்டான். 3.To be exhausted, to become weary; [T. alacu, K. alacu, Tu. alasu.] 1. To rinse; 2. To scold, snub;
  • அலைதல். இறுநுசுப்பலச வெறுநிலஞ் சேர்ந்தாங்கு (மணி.9. 7). 1. To shake, be agitated;
  • வருந்துதல். திருவுடம் பலச நோற்கின்றான் (கம்பரா. சூர்ப்ப.18) 2. To suffer, to be distressed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K. Tu. alacu.]1. To shake, be agitated; அலைதல். இறுநுசுப்பலச வெறுநிலஞ் சேர்ந்தாங்கு (மணி. 9, 7). 2. Tosuffer, to be distressed; வருந்துதல். திருவுடம்பலச நோற்கின்றான் (கம்பரா. சூர்ப்ப. 18). 3. [M.alasuka.] To be exhausted, to become weary;சோர்தல். (சிலப். 16, 197, அரும்.) --v. tr. [T.alaću, K. alacu, Tu. alasu.] 1. To rinse;நீரிற் கழுவுதல். தோய்த்த வேஷ்டியை அலசு. 2.To scold, snub; வெட்கும்படி பலபடப் பேசுதல்.அவனை நன்றாய் அலசிவிட்டான்.