- குறைதல். ஒன்னார் மதிநிலை யருக (இரகு. யாக. 34). 1. To become scarce, diminish, to be reduced;
- பெருகுதல். அருகு நேமிபாதாளம் (தக்க யாகப். 104.) To increase;
- அரிதாதல். அருகுவித் தொருவரை யகற்றலின் (கலித். 142). 2. To happen rarely, to be of uncommon occurrence;
- அஞ்சுதல். அஞ்செஞ் சாய லருகா நணுகும் (சிலப். 30, 126). 3. To be afraid, to fear;
- நோவுண்டாதல். (W.) 4. To smart, prick, pain;
- கெடுதல். பருகு வன்ன வருகா நோக்கமோடு (பொருந. 77).; கிட்டுதல். (சூடா.) குறிப்பித்தல். (இறை. 11, உரை.) அறிதல். (இறை. 11, உரை.) 5. To disappear, perish; 1. To approach; 2. To indicate one's intention; 3. To know;
|