தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாய் ; பாட்டி ; பார்வதி ; தருமதேவதை ; சமணசமயத் தவப்பெண் ; நோய்வகை ; அழகு ; அமைதி ; வருபிறப்பு ; கடுக்காய் ; நூல்வனப்புள் ஒன்று ; மேலுலகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாட்டி. Parav. 4. Grandmother;
  • மேலுலகம். அம்மை பயக்கு மமிர்து (தேவா. 845, 8) 2. Heaven,
  • வருபிறப்பு. (பிங்.) 1. Future birth;
  • நூல் வனப்புளொன்று. (தொல். பொ. 547.) 3. (Pros.) Agreeable succession of short soft words in verse of not more than five lines, having a soothing effect;
  • அமைதி. அம்மை யஞ்சொலார் (சீவக. 3131). 2. Calmness;
  • அழகு. (பிங்.) 1. Beauty;
  • (மலை.) 7. cf. daša-mātā. Chebulic myrobalan. See கடுக்காய்.
  • சைனமதத் தவப்பெண். (சூடா.) 6. Female Jaina recluse, nun;
  • தாய். அத்தனொடு மம்மையெனக் கானார் (தேவா. 598, 9). 1. Mother;
  • பார்வதி. (பிங்.) 2. Pārvatī;
  • நோய்வகை. 5. Smallpox, chicken-pox, measles;
  • தருமதேவதை. (சூடா.) 3. (Jaina.) Goddess of virtue;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a woman, the good woman of the house; the mother, தாய்; 2. goddess of virtue; 3. small pox, measles அம்மையார், (hon.) the mother. அம்மைகுத்த, to inoculate. அம்மைப்பால், lymph of small-pox pustules. அம்மை வடு, small-pox pits. அம்மை வார்க்க, அம்மைபோட்ட, to have the small-pox.
  • s. beauty, அழகு; 2. calmness சாந்தம்.
  • s. future birth; 2. heaven.

வின்சுலோ
  • [ammai] ''s.'' The small pox as the sport of the goddess Parvati, வைசூரி. ''(c.)'' 2. Mother, a matron, தாய். ''(p.)'' 3. Parvati, பார்வதி. 4. Beauty, அழகு. 5. One of the eight beauties of versification, the use of very short sounds easily pronounced in verse, பாவினெண்வனப்பினொன்று. 6. The next birth or state, the next transmigration, வருபிறப்பு. 7. A nun or female recluse of the Jaina sect, தவப்பெண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அம்மா. 1. Mother;தாய். அத்தனொடு மம்மையெனக் கானார் (தேவா. 598, 9).2. Pārvatī; பார்வதி. (பிங்.) 3. (Jaina.) Goddessof virtue; தருமதேவதை. (சூடா.) 4. Grandmother;பாட்டி. Parav. 5. Smallpox, chicken-pox,measles; நோய்வகை. 6. Female Jaina recluse,nun; சைனமதத் தவப்பெண். (சூடா.) 7. cf. daša-mātā. Chebulic myrobalan. See கடுக்காய். (மலை.)
  • n. < அம். 1. Beauty;அழகு. (பிங்.) 2. Calmness; அமைதி. அம்மை யஞ்சொலார் (சீவக. 3131). 3. (Pros.) Agreeable suc-cession of short soft words in verse of not morethan five lines, having a soothing effect; நூல்வனப்புளொன்று. (தொல். பொ. 547.)
  • n. < அ + மை. 1. Futurebirth; வருபிறப்பு. (பிங்.) 2. Heaven; மேலுலகம்அம்மை பயக்கு மமிர்து (தேவா. 845, 8).