அசைவு
தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆட்டம் ; சலனம் , அசைதல் ; சஞ்சலம் ; சோர்வு , தளர்வு ; வருத்தம் ; உண்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னிலைமை கெட்டு வருந்தும் வருத்தம். இளிவே யிழவே யசைவே (தொல்.பொ.253). 4. Suffering caused by loss of position;
  • தளர்வு. (சீவக. 1185.) 2. Weariness, faintness, exhaustion;
  • சலனம். தூணமொத்தசைவற நின்றான் (காஞ்சிப்பு. சார்ந்தா.13). 1. Shaking, moving about, swinging;
  • தோல்வி. அசைவில படையருள் புரிதருமவன் (தேவா 568,6). 5. Defeat;
  • சோம்பு. ஆகூழாற் றோன்று மசை வின்மை (குறள்,371) 3 Laziness, sloth;
  • தப்பு. அசைவிலரெழுந்து (மதுரைக். 650). 1. Slip, failure;
  • முடிவு. (சம். அக. Ms.) 3. End;
  • உண்கை. நஞ்சினை யசைவுசெய்தவன் (தேவா. 581, 3). 2. Eating;

வின்சுலோ
  • ''v. noun.'' Shaking, moving, motion, அசைதல். 2. A kind of swinging shelf, ஊசல். 3. Motion, passion, emo tion as applicable to the qualities of the mind, மனவெழுச்சி. 4. Stir, bustle, agita tion, சஞ்சலம். 5. Weariness, failure, faint ing, சோர்வு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அசை-. 1. Shaking,moving about, swinging; சலனம். தூணமொத்தசைவற நின்றான் (காஞ்சிப்பு. சார்ந்தா. 13). 2. Weariness, faintness, exhaustion; தளர்வு. (சீவக. 1185.)3. Laziness, sloth; சோம்பு. ஆகூழாற் றோன்று மசைவின்மை (குறள், 371). 4. Suffering caused by lossof position; முன்னிலைமை கெட்டு வருந்தும் வருத்தம்.இளிவே யிழவே யசைவே (தொல். பொ. 253). 5.Defeat; தோல்வி. அசைவில படையருள் புரிதருமவன் (தேவா. 568, 6).
  • n. < அசை-. 1. Slip,failure; தப்பு. அசைவிலரெழுந்து (மதுரைக். 650).2. Eating; உண்கை. நஞ்சினை யசைவுசெய்தவன்(தேவா. 581, 3). 3. End; முடிவு. (சம். அக. Ms.)