தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிவு ; அழுக்கு ; தீட்டு ; தீயநெறி ; பொய் ; ஊன் ; கீழ்மகன் ; தீநாற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியபிசாரம். புல்ல லோம்பன்மின் புலைமக னிவனென (மணி. 13, 91). 6. Adultery;
  • அசுத்தம். புலைசூழ் வேள்வியில் (மணி. 13, 28). 2 Uncleanness;
  • கீழ்மகன். எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் (ஆசாரக். 6). 8. Outcaste;
  • தீ நாற்றம். (W.) 9. Stench;
  • ஊன்.புலையுள்ளி வாழ்தல் (இன். நாற். 13). 7. Animal food;
  • தீட்டு. பொன்னகர் மூடிப் புலைசெய் துடன்று (கல்லா. 25, 11). 3 Defilement;
  • தீயநெறி. புலைமேலுஞ் செலற்கொத்துப் போதுகின்ற செல்வத்தின் (கம்பரா. இராவணன்வதை. 204). 4. Vice, evil way;
  • பொய். கள்ளங் கொலை கட்புலை காமமென் றைந்து மற்றார்க்கு (அரிச். பு. நாட்டுப். 6). 5. Lie;
  • இழிவு. புலையாம் புறவி பிறந்து (அஷ்டப். திருவரங்கக்க.16). 1. Baseness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as புலால்; 2. baseness, wickedness, evil, தீமை; 3. a lie, பொய். புலையுங்கொலையுங் களவுந்தீர், avoid flesh (or a lie), murder and theft. புலைஞர், same as புலையர். புலையன், (fem. புலைச்சி, pl. புலையர்) a man of a certain low mountain tribe; 2. a base or low-caste person. புலையாட, to lead a vicious life. புலையாட்டம், -யாட்டு (coll.) illusiveness, a false appearance.

வின்சுலோ
  • [pulai] ''s.'' Flesh, or fish, ஊன். 2. Stink, stench, நாற்றம். 3. Vice, evil, baseness, தீமை, as புல். 4. A lie, பொய். புலையுங்கொலையுங்களவுந்தவிர். Avoid flesh (or a lie) murder, and theft. ''(Avv.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. புல-. [K. hole.] 1.Baseness; இழிவு. புலையாம் பிறவி பிறந்து (அஷ்டப்.திருவரங்கக்க. 16). 2. Uncleanness; அசுத்தம்.புலைசூழ் வேள்வியில் (மணி. 13, 28). 3. Defilement; தீட்டு. பொன்னகர் மூடிப் புலைசெய் துடன்று(கல்லா. 25, 11). 4. Vice, evil way; தீயநெறி.புலைமேலுஞ் செலற்கொத்துப் போதுகின்ற செல்வத்தின் (கம்பரா. இராவணன்வதை. 204). 5. Lie;பொய். கள்ளங் கொலை கட்புலை காமமென் றைந்துமற்றார்க்கு (அரிச். பு. நாட்டுப். 6). 6. Adultery;வியபிசாரம். புல்ல லோம்பன்மின் புலைமக னிவனென (மணி. 13, 91). 7. Animal food; ஊன்.புலையுள்ளி வாழ்தல் (இன். நாற். 13). 8. Outcaste;கீழ்மகன். எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் (ஆசாரக்.6). 9. Stench; தீ நாற்றம். (W.)