தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலையாய்த் தங்குதல் ; துன்பமற்ற நிலைமையை அடைதல் ; நீடித்தல் ; ஒன்று நிற்கக்கூடியவளவு ஆழமுடைத்தாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரமாய்த்தங்குதல். வேற்றுமையுருபு நிலைபெறு வழியும் (தொல்.எழுத்.132) 1. To stay firmly;
  • துன்பமற்றநிலையை யடைதல். நிலைபெறுமா றெண்ணுதியே னெஞ்சே நீவா (தேவா. 727, 3). 2. To gain a resting place; to secure peace;
  • நீடித்தல். (W.) 3. To endure;
  • ஒன்று நிற்கக்கூடியவளவு ஆழமுடைத்தாதல். கழை நிலைபெறாஅக் குட்டத் தாயினும் (பதிற்றுப். 86, 9). 4. To be fathomable;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To stay firmly; திரமாய்த்தங்குதல். வேற்றுமையுமருபு நிலைபெறு வழியும் (தொல். எழுத். 132).2. To gain a resting place; to secure peace;துன்பமற்றநிலையை யடைதல். நிலைபெறுமா றெண்ணுதியே னெஞ்சே நீவா (தேவா. 727, 3). 3. Toendure; நீடித்தல். (W.) 4. To be fathomable;ஒன்று நிற்கக்கூடியவளவு ஆழமுடைத்தாதல். கழைநிலைபெறாஅக் குட்டத் தாயினும் (பதிற்றுப். 86, 9).