தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்காண வெளிப்படல் ; அறியப்படுதல் ; பிறத்தல் ; முளைத்தல் ; விளங்குதல் ; நிலைகொள்ளுதல் ; வருதல் ; சாரியை முதலியன சொற்களிடையே வருதல் ; உண்டாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளங்குதல். மதுரகவி தோன்றக் காட்டுந் தொல்வழியே நல்வழி (ரஹஸ்ய. 20). To be clear, explicit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K. tōṟ,M. tōṉṉuka.] 1. To be visible; கட்புலனாதல்.துறை திறம்பாமற் காக்கத் தோன்றினான் வந்துதோன்ற (கம்பரா. வாலிவதை. 74). 2. To cometo mind; அறியப்படுதல். 3. To appear, seem,spring up, come into existence; உண்டாதல்.பெருஞ்செல்வந் தோன்றியக்கால் (நாலடி, 2). 4. Tobe born; பிறத்தல். தோன்றிற் புகழொடு தோன்றுக(குறள், 236). 5. To exist; நிலைகொள்ளுதல். புணரிய னிலையிடை யுணரத் தோன்றா (தொல். எழுத்.482). 6. To come, turn up; வருதல். நிருதர்தோன்றியுளரென்றால் (கம்பரா. அகத்திய. 52). 7.(Gram.) To be inserted, as cāriyai; சாரியைமுதலியன சொற்களிடையே வருதல். வற்றென்சாரியை முற்றத்தோன்றும் (தொல். எழுத். 189). (நன்.)
  • 5 v. intr. To beclear, explicit; விளங்குதல். மதுரகவி தோன்றக்காட்டுந் தொல்வழியே நல்வழி (ரஹஸ்ய. 20).