தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகை ; நறும்புகை ; நெருப்பு ; காண்க : வெள்ளைக்குந்துருக்கம் ; நீண்ட மரவகை ; கடப்பமரம் ; அபிநயவகை ; காண்க : கருங்குங்கிலியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகை, தூபமுற்றிய காரிருள் (கம்பரா.கைகேசிசூழ். 61). 2. Smoke, fume;
  • நறும்புகை. சலம்பூவோடு தூபமறந்தறியேன் (தேவா.946,6). 1. Incense, fragrant smoke, aromatic vapour;
  • நிமிர்ந்த நடுவிரலும் சுட்டுவிரலும் பாதிப்பட வளையநிற்கும் இணையாவினைக்கைவகை. (சிலப்.3,18, உரை.) 4. (Nāṭya.) A gesture with one hand in which the fore-finger and the middle finger are united and half bent;
  • நெருப்பு. அழலுந்தூபமன்றி (இரகு. தீக்குவி. 139). 3. Fire;
  • See கடம்பு. (பிங்.) 5. Common cadamba.
  • See வெள்ளைக்குந்துருக்கம். (L.) 6. Piny Varnish.
  • நீண்ட மரவகை. (L.) 7. White piny varnish, l. tr., Vatica roxburghiana;
  • See கருங்குங்கிலியம். 8. Black dammar.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. incense, the smoke of any fragrant gum. தூபகலசம், -முட்டி, -க்கிண்ணி, a censer. தூபக்கால், an incense-stand, a standing censer. தூபங்காட்ட, -போட, -கொடுக்க, to burn incense, to perfume a thing over a censer. தூபதீபம், incense & light, in the course of puja. தூபவர்க்கம், materials used for incense. தூபாராதனை, the offering of incense.

வின்சுலோ
  • [tūpam] ''s.'' Incense, fragrant smoke, aromatic vapor, நறும்புகை. W. p. 445. D'HUPA. ''(c.)'' 2. (for தூமம்.) Smoke in general, fume, புகை. 3. ''(fig.)'' Materials used for incense, தூபவருக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhūpa. 1. Incense,fragrant smoke, aromatic vapour; நறும்புகை.சலம்பூவொடு தூபமறந்தறியேன் (தேவா. 946, 6). 2.Smoke, fume; புகை. தூபமுற்றிய காரிருள் (கம்பரா. கைகேசிசூழ். 61). 3. Fire; நெருப்பு. அழலுந்தூபமன்றி (இரகு. திக்குவி. 139). 4. (Nāṭya.)A gesture with one hand in which the fore-finger and the middle finger are united andhalf bent; நிமிர்ந்த நடுவிரலும் சுட்டுவிரலும் பாதிப்பட வளையநிற்கும் இணையாவினைக்கைவகை. (சிலப். 3,18, உரை.) 5. Common cadamba. See கடம்பு.(பிங்.) 6. Piny varnish. See வெள்ளைக்குந்துருக்கம். (L.) 7. White piny varnish, 1. tr.Vaticaroxburghiana; நீண்ட மரவகை. (L.) 8. Blackdammar. See கருங்குங்கிலியம்.