தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேரொலிக் குறிப்பு ; மிகுமணக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணம் வீசுதற்குறிப்பு. மணந்தான் குமுகுமென் றடிக்கவில்லை (தனிப்பா. i, 389. 44). 2. Expr. signifying sending out whiffs of odour;
  • பேரொலிக்குறிப்பு. குடமுழ வாண னீரயிரங் கரங்கொண்டு குமு குமெனவே முழக்க (திருப்போ. சந். பிள்ளைத். சிறுபறை. 2). 1. Onom. expr. signifying uproar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குமுகுமுத்தல், v. n. spreading as odour; sending out odour. குமுகுமென்று மணக்கிறது, it has a nice smell.

வின்சுலோ
  • [kumukumeṉl] ''v. noun. [local.]'' To spread--as odor; to be very fragrant. 2. To fall in torrents. குமுகுமென்றுமணக்கிறது. It is very fragrant; it spreads a strong odor.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1.Onom. expr. signifying uproar; பேரொலிக்குறிப்பு. குடமுழு வாண னீராயிரங் கரங்கொண்டு குமுகுமெனவே முழுக்க (திருப்போ. சந். பிள்ளைத். சிறுபறை.2). 2. Expr. signifying sending out whiffs ofodour; மணம் வீசுதற்குறிப்பு. மணந்தான் குமுகுமென் றடிக்கவில்லை (தனிப்பா. i, 389, 44).