தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணல் , நினைத்தல் ; ஆலோசித்தல் ; மதித்தல் ; தியானித்தல் ; முடிவுசெய்தல் ; கணக்கிடுதல் ; மதிப்பிடுதல் ; துய்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணக்கிடுதல். அன்ன கேள்வ ரனேகரை யெண்ணினாள் (உபதேசகா. அயமுகி. 59). 7. To count, reckon, compute;
  • மதிப்பிடுதல். எண்ணற்கரிய முடிவேந்தர் (பாரத. இராச. 32). 8. To set a price upon; to value;
  • அனுபவித்தல். எண்ணான் சிவனசத்தை (சி. போ. 5, 2, 1). 9. To enjoy;
  • தியானித்தல். எண்ணி யஞ்செழுத்து மாறி (சிவப்பிர. உண்மை, 47). 6. To meditate upon;
  • உத்தேசித்தல். 5. To guess, conjecture, surmise;
  • மதித்தல். வெயிலோன்மகற்குமுட னெண்ணத்தகுந் திறலினான் (பாரத. பதினெட். 4). 4. To esteem, respect, honour;
  • ஆலோசித்தல். எண்ணித்துணிக கருமம் (குறள், 467). 2. To consider, deliberate about, take counsel, ponder on;
  • நினைத்தல். (பிங்.) 1. To think;
  • தீர்மானித்தல். (பிங்.) 3. To resolve upon, determine;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எண்ணல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [T. ennu,K. M. Tu. eṇṇu.] 1. To think; நினைத்தல்.(பிங்.) 2. To consider, deliberate about, takecounsel, ponder on; ஆலோசித்தல். எண்ணித் துணிககருமம் (குறள், 467). 3. To resolve upon, determine; தீர்மானித்தல். (பிங்.) 4. To esteem,respect, honour; மதித்தல். வெயிலோன்மகற்குமுட னெண்ணத்தகுந் திறலினான் (பாரத. பதினெட். 4).5. To guess, conjecture, surmise; உத்தேசித்தல்.6. To meditate upon; தியானித்தல். எண்ணி யஞ்செழுத்து மாறி (சிவப்பிர. உண்மை, 47). 7. Tocount, reckon, compute; கணக்கிடுதல். அன்னகேள்வ ரனேகரை யெண்ணினாள் (உபதேசகா. அயமுகி.59). 8. To set a price upon; to value; மதிப்பிடுதல். எண்ணற்கரிய முடிவேந்தர் (பாரத. இராச. 32).9. To enjoy; அனுபவித்தல். எண்ணான் சிவனசத்தை(சி. போ. 5, 2, 1).