தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஒதி ; வித்தை ; உலைத்துருத்தி .
    (வி) பிற , உதித்தலைச் செய் ; உதயமாகு ; அவதரி ; காலந்தொடங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வித்தை. உதியொரேழிரண்டுந் தந்த முனிவ (இரகு. அயனு. 19). Science, learning;
  • உதிமரக் கிளவி (தொல். எழுத். 243). 1. Goompain tree. See ஓதி.
  • மரவகை. (L.) 2. Falcate trumpet flower, m. tr., Dolichandrone falcata;
  • உலைத்துருத்தி. (பிங்.) 3. Metal-worker's bellows;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. rise as the sun, moon, stars, உதயமாகு, 2. be born, பிற; 3. come into existence, தோன்று, என்மனதில் அப்படி உதிக்கிறது, so it seems to me, such thoughts rise in my mind. திடீரென வந்துதித்தான், he suddenly made his appearance. உதிவெள்ளி, the morning star, (venus) உதிப்பு, v. n. birth, appearance; 2. wisdom.
  • VI. v. i. increase in size, swell, பரு. அவன் உதித்து விட்டான், அவன் ஊதி உதித்துப்போனான், he has grown very very stout. உதிப்பு, v. n. swelling.
  • s. science, learning, வித்தை.
  • s. bellows, துருத்தி; 2. goompain tree, ஒதி.

வின்சுலோ
  • [uti] ''s.'' A smith's bellows, உலைத்து ருத்தி. 2. A species of tree. See ஒதி. ''(p.)''
  • [uti] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To rise--as the sun, moon, &c., உதயமாக. 2. To be born--as a good or great personage, to be born, (spoken auspiciously, sometimes of common persons) பிறக்க. 3. To become incarnate--as a deity, to assume a form, அவதரிக்க. 4. To spring, arise, come into existence, grow out of, (தீ. 55.) to origi nate, become formed or developed, to have origin--as a book, science, &c., to arise--as primitive elements one out of another; to become evolved--as the world, &c., தோன்ற. 5. To commence--as a new period of time whether age, year, a month or otherwise, காலந்தொடங்க. 6. To swell, increase in size, பருக்க. நானுடனேயங்கேவந்துதிப்பேன். I will be in your company immediately. உலகமுதித்துதித்தொடுங்கும். The worlds ap pear and disappear again and again, (emanating from and being resolved into their primitive elements). கிணற்றிலேதண்ணீருதித்தது. The water has sprung up in the (new) well--an auspi cious word. மனதிலுதித்தநினைவு. The thoughts that arose in the mind.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. உதி-. 1. Goompain tree.See ஓதி. உதிமரக் கிளவி (தொல். எழுத். 243). 2.Falcate trumpet flower, m. tr.Dolichandronefalcata; மரவகை. (L.) 3. Metal-worker's bellows;உலைத்துருத்தி. (பிங்.)
  • n. < உதி-. Science, learning;வித்தை. உதியொரேழிரண்டுந் தந்த முனிவ (இரகு.அயனு. 19).