தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழங்குதல் ; இடியிடித்தல் ; நோதல் ; தாக்கிப்படுதல் ; மோதுதல் ; கோபித்தல் ; தூளாக்குதல் ; தகர்த்தல் ; நசுக்குதல் ; தாக்குதல் ; முட்டுதல் ; கழறிச் சொல்லுதல் ; கொல்லுதல் ; தோண்டுதல் ; கெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபித்தல். கூற்றின்னிடிக்குங் கொலைவேலவன் (சீவக.432). -tr. caus. of இடி1-. தூளாக்குதல். பொற்சுண்ண மிடித்து நாமே (திருவா.9. 1). தகர்த்தல். வீட்டை யிடித்துத் தள்ளினான். நசுக்குதல். கரும்பினை.யிடித்துநீர் கொள்ளினும் (நாலடி.156). தாக்குதல். குந்தத்தால் இடித்தான். முட்டுதல். அந்த 6. To be angry, furious; 1. To pound in a mortar; to bray with a pestle; to reduce to flour; 2. To beat so as to break, batter to pieces, demolish, shatter; 3. To press; to crush, as sugarcane; 4. To push or thrust side-wise, as with the elbow; 5. To att
  • மோதுதல். கப்பல் கரையில் இடித்தது. (W.) 5. To strike against, as a vessel against the shore;
  • தாக்கிப்படுதல். கதவு நிலை தலையில் இடிக்கும். 4. To come in contact with, hit against;
  • முழங்குதல். அரிமா னிடித்தன்ன (கலித்.15). 1. To sound loud; to make a noise, as a gun; to roar, as a lion;
  • இடியொலி படுதல். இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர் (நாலடி.100). 2. To thunder;
  • நோதல். தலையிடிக்கிறது. 3. To throb, beat; to ache, as the head;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. To soundloud; to make a noise, as a gun; to roar, as alion; முழங்குதல். அரிமா னிடித்தன்ன (கலித். 15). 2.To thunder; இடியொலிபடுதல். இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர் (நாலடி. 100). 3. Tothrob, beat; to ache, as the head; நோதல். தலையிடிக்கிறது. 4. To come in contact with, hitagainst; தாக்கிப்படுதல். கதவு நிலை தலையில் இடிக்கும். 5. To strike against, as a vessel againstthe shore; மோதுதல். கப்பல் கரையில் இடித்தது.(W.) 6. To be angry, furious; கோபித்தல். கூற்றின் னிடிக்குங் கொலைவேலவன் (சீவக. 432).--tr.caus. of இடி-. 1. To pound in a mortar; to braywith a pestle; to reduce to flour; தூளாக்குதல்.பொற்சுண்ண மிடித்து நாமே (திருவாச. 9, 1). 2. Tobeat so as to break, batter to pieces, demolish,shatter; தகர்த்தல். வீட்டை யிடித்துத் தள்ளினான். 3.To press; to crush, as sugarcane; நசுக்குதல்.கரும்பினை . . . யிடித்துநீர் கொள்ளினும் (நாலடி. 156).4. To push or thrust side-wise, as with theelbow; தாக்குதல். குந்தத்தால் இடித்தான். 5. Toattack with the horns, as a bull; to butt againstthe udder, as a sucking calf; முட்டுதல். அந்த மாடுஇடிக்கும். 6. To reprove sharply or admonishincisively; கழறிச்சொல்லுதல். இடிப்பாரை யில்லாதவேமரா மன்னன் (குறள், 448). 7. To kill, slay;கொல்லுதல். இடிக்குங்கொ லிவனை யென்பார் (சீவக.1108). 8. To dig; தோண்டுதல். கணிச்சிகளிற்கயம்பட நன்கடித்து (சீவக. 592). 9. To destroy,annihilate; கெடுத்தல். விருப்பிடித்து (இரகு.தேனுவ. 71).